பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 புருஷர் மணமகனாகக் கிடைத்தால், அது நல்ல அதிர்ஷ்ட் கரமான காரியமாக இருக்கும் என்று பல நாட்களாய் தான் எண்ணியிருந்ததாக அவளிடம் கூறினாள் அதிசீக்கிரத்தில் ஒரு முகூர்த்தநாள் பார்த்து அன்றைய தினம் கலியாணத்தை முடித்து விடுவதே உசிதமானதென்று உரைத்தாள். ஆனால், எப்படியாவது பிரயாசைப்பட்டு கமலத்தையும் கலியாணத்திற்கு அழைத்துவர வேண்டும் என்றும், வேறு பலவகையாகவும் யோசனை கூறிக் கொண்டிருந்த சமயத்தில் கலியாணசுந்தரம் வந்து சேர்ந்தான். அவன் வந்த ஒசையைக் கேட்ட உடனே ஷண்முகவடிவின் இருதயம் திடுக்கு திடுக்கென்று அடித்துக்கொண்டது. இன்னது என்று விவரிக்க முடியாத ஒருவித பிரம்மாநந்தம் அவளது மனத்திலும் ஐம் புலன்களிலும் நிறைந்து சகிக்க இயலாதவிதமாக அவளை வருத்தின. வயிறு, இருதயம், மார்பு முதலிய ஸ்தானங்கள் எல்லாம் அந்த இன்ப வெள்ளத்தைத் தாங்காது படீரென வெடித்துப் போகுமோ என்று அஞ்சத் தகுந்த நிலைமையை அடைந்தன. அதற்கு முன், அவள் இருந்ததைவிட அன்றையதினம் நூறு மடங்கு அதிகமான நாணமும், கிலேசமும், சங்கடமும் அடைந்தவளாய் முன்னிலும் அதிக மறைவான இடத்தில் போய் ஒளிந்துகொண்டாள். ஆகாயத்திலுள்ள பூர்ணசந்திரனிடத்திலிருந்து அமிர்தமும், குளிர்ச்சியும், பிரகாசமும் கிரணங்களாகப் பரவி உலகம் முழுவதையும் நிரப்பி ஆனந்த பரவசம் அடையச் செய்வது போல, கலியாணசுந்தரம் என்ற யெளவனப் புருஷன் அவளது கண்ணில் படாமல் கூடத்தில் இருந்ததனாலும், அவனிடத்திலிருந்து எழுந்த மோகனாஸ்திரங்கள் அவளது மனதையும் ஐம் புலன்களையும் மயக்கி நெக்குநெக்கு உருகச் செய்து இன்பவாரிதியில் தோய்வித்தன. ஆகவே, அந்த இன்ப வல்லி அவனைப் பார்க்க லஜ்ஜைப்பட்டு அஞ்சினாள். ஆனாலும், அவனே உயர்நிலை என்றும், தனக்கு ஜீவாதாரமான