பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 - பூர்ணசந்திரோதயம்-2 அமிர்த ஊற்றின் இருப்பிடம் என்றும் நினைத்தவளாய், தான் என்ன செய்வது, எதைப் பற்றிப் பேசுவது என்பதை அறியாமல் உருகி ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தாள். முத்தம்மாள்.அதற்கு முந்தியநாட்களில் காட்டியதைவிடநூறு மடங்கு அதிகரித்த வாஞ்சையும், மரியாதையும், உபசாரமும் குதுகலமும், பணிவும் காட்டி, கலியாணசுந்தரத்தை வரவேற்று உட்காரச் செய்தாள். அதுவரையில் தான் எவ்விதக் கைம்மாறும் கருதாமல் கபட மற்ற சுத்தமான மனதோடு அந்த பங்களாவிற்குள் வந்து அவர்களது விஷயத்தில் பரிவாகவும் அன்பாகவும் நடந்து பற்பல உதவிகள் செய்து, கடைசியில் கலியாண விஷயமாகப் பிரஸ்தாபம் செய்து கமலத்திற்குக் கடிதம் எழுதியிருக்கும் விஷயம் அன்றைய தபால் மூலமாக அவர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் ஷண்முகவடிவும் முத்தம்மாளும் தன்னைப்பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் களோ என்றும், கலியாணசுந்தரத்தைப் பற்றி என்னவிதமான மறுமொழி கூறப்போகிறார்களோ என்றும், மூத்தவளான கமலம் கலியாணம் செய்துகொள்ளாது இருக்கையில், இளையவளான தான் கலியாணம் செய்துகொள்வது தகாத செய்கை என்று ஒருவேளை ஷண்முகவடிவு மறுத்து விடுவாளோ என்றும், மகா விவேகியும் நற்குண மணியுமான அந்த அணங்கு ஒருகால் தன்னைக் காதலிக்க மாட்டாளோ என்றும், வேறு பலவகையாகவும் நினைத்து அளவற்ற கவலையும் அச்சமும் கொண்டவனாய் வந்த கலியாணசுந்தரம் வேலைக்காரியின் மாறுபட்ட நடத்தையும் மலர்ந்த முகத்தையும் கண்டான். கண்டவுடனே, அவனது ஐயங்களும் அச்சங்களும் ஒரே நொடியில் விலகின. கட்டிலடங்கா களிப்பும் குதூகலமும் மனதில் பொங்கி எழுந்து அவனது தேகத்தைப் பரவசப்படுத்தின. தான் என்ன பேசுவது என்பதை அறியாமல் அவன் தத்தளித்து இன்பமயமாக நைந்து இளகி உட்கார்ந்திருந்தான்.