பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பூர்ணசந்திரோதயம்-3 பேசுகிறவரையில் என் மனம் தவித்த தவிப்பும் அடைந்த ஆவலும் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு மனசும் ஒத்து ஒன்றுபட்டு போனபிறகு, நாம் இனியும் விசனப் பட்டு நடந்ததை எல்லாம் நினைத்து வருந்தி, இப்போது அனுபவிக்கப் போகும் சந்தோஷத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? எப்போதும் இப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் வஸ்துவினிடத்தில் தான் ருசி அதிகம்' என்றாள். அந்த வார்த்தைகள் நமது உத்தம புருஷனுக்குக் கன்னகடுரமாக இருந்தன. அவன் நிரம் பவும் இரக்கமான பார்வையாக அவளைப் பார்த்து, 'அம்மாளு! நான் சொன்ன வார்த்தைகளின் கருத்தை நீ சரியானபடி தெரிந்து கொண்டிருந்தால் இப் படிப் பேசமாட்டாய்; நான் உங்களோடு பழக்கம் செய்துகொண்ட முதல் இதுவரையில் நான் உங்களிடத்தில் ஒரு விஷயத்தை மறைத்துக் கபடமாக நடந்து வந்திருக்கிறேன். ஆனால், என் உண்மையான நோக்கம் என்னவென்பதை வெளியிட வேண்டிய காலம் சமீபித்து விட்டது என்று நினைக்கிறேன்; நான் வெளியிடப் போகும் விஷயத்தை நீ விளையாட்டாக மதிக்காமல், மகா விபரீதமானதாக எண்ண வேண்டும்' என்றான். அவனது சொல்லின் கருத்தை உள்ளபடி அறிந்து கொள்ள மாட்டாமல் திகைப்பும் கலக்கமும் கொண்டு தத்தளித்த அம்மாளு, 'நமக்குள் அப்படிப்பட்ட விபரீதமான விஷயம் என்ன இருக்கப் போகிறது? அப்படி ஏதாவது இருந்தாலும், அதை வெளியிட இது சரியான சமயமல்ல. இப்போது என் மனம் நாடி இருப்பது எதுவோ அதைத்தவிர, மற்ற எதிலும் என் மனம் இப்போது செல்லத் தயாராக இல்லை' என்று கூறி, அவனை நோக்கி விஷமமாகக் கண் சிமிட்டினாள். கலியாணசுந்தரம்:- உன் தங்கை சிவபாக்கியத்தை நான் சந்தித்தேன். அந்தச் சம்பந்தமாக நான் சில வார்த்தைகள்