பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - பூர்ணசந்திரோதயம்-3 எதாவது ஒரு பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டாப் அல்லவா?’ என்றார். லீலாவதி, "ஆகா! அப்போது சமாதானம் சொல்லுகிறதா? கையும் களவுமாய் பிடிபட்ட திருடன் ஏதாவது பொய்ச் சமாதானம் சொன்னால் அதை யாராவது ஒப்புக் கொள்ளு வார்களா? அப்படிப்பட்ட சமாதானம் சொல்வதைவிட மெளனமாக இருப்பதே நாணயமான காரியம். நான் அவருக்கு எவ்விதச் சமாதானமும் சொல்லவில்லை. அவர் என்னை உடனே எங்களுடைய மாளிகைக்கு அழைத்துக்கொண்டு போனார். அவ்விடத்தில் அவரும் நானும் வெகுநேரம் வரையில்பேசி ஆலோசனை செய்துகொண்டிருந்தோம். கடைசியில் அவர் ஒருவித முடிவிற்கு வந்து அந்த விஷயத்தில் உங்களுடைய சம்மதியைக் கேட்டுக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி வைத்தார்' என்றாள். மாசிலாமணிப் பிள்ளை எதற்கு என் சம்மதி வேண்டு மாம்?" என்று வியப்போடு வினவினார். லீலாவதி, “நீங்கள் உடனே இந்த ஊரைவிட்டுப் புறப்பட்டு மைசூருக்குப் போய்விட்டால், அவ்விடத்தில் உங்களுடைய செலவுக்காக மாதாமாதம் ஐந்நூறு ரூபாய் கொடுக்கும் படி ஏற்பாடு செய்கிறதாக அவர் ஒப்புக்கொள்ளுகிறார் என்றாள். அவள் அவ்வாறு பேசியபோது அவள் அவரைப் பார்த்த அன்பற்ற உறுதியான பார்வையிலிருந்து, அவளும் அந்த யோசனையை நிறைவேற்றி வைக்க உறுதி செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவர் எளிதில் யூகித்துக் கொண்டார். ஆகையால், அவரது மனதில் ரெளத்திராகாரமான கோபம் பொங்கியெழுந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு புரளியாகப் பேசத் தொடங்கி, "சரி; உன்னுடைய பெரிய தகப்பனார் எப்போதும் தாராள குணம் உள்ளவர் அல்லவா. இப்போது அவர் செய்ய ஒப்புக்கொள்ளும் உதவி அபாரமானதாகவே இருக்கிறது. சரி, அவருடைய பிரியப்படியே