பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பூர்ணசந்திரோதயம்-3 இருந்துவிடத் தீர்மானித்து விட்டேன். ஆதியிலிருந்து நான் உங்களின்மேல் வைத்த வாஞ்சையையும் பிரேமையையும் நாளடைவில் நீங்களே சிதர அடித்து என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்களே எனக்கு விசேஷம் என்று நினைத்து, நான் உற்றார் உறவினர்களையும் பெரும் செல்வத்தையும், செல்வாக்கையும், சுக செளகரியங் களையும் பொருட்படுத்தாமல் விலக்கி, உங்களையே கதியாக மதித்து உங்களையண்டி இருந்ததற்கு வெகுமதியாக நீங்கள் என்னை இதுவரையில் படுத்திவைத்த பாடுகளும், வைத வசவுகளும், அடித்த அடிகளும் கணக்கில் அடங்குமா? அவைகள் தெய்வத்துக்குத்தான் சம்மதமாகுமா? எங்களுடைய மனிதரிடத்திற்கு மறுபடி எப்படிப் போகிறது என்கிற அவமானத்தைக் கருதிநான் இதுவரையில் உங்களுடைய சித்திர வதைகளை எல்லாம் சகித்துக்கொண்டு இருந்து வந்தேன். ஆனால், உங்கள் விஷயத்தில் ஒரே ஒரு தவறு செய்திருக்கிறேன். அதுவும் உங்களால்தான் நடந்த விஷயம். நீங்கள் என்னை அளவு கடந்து வதைத்து என்னுடைய பிரியம் எல்லாம் வெறுப்பாக மாறும் படி செய்தீர்கள். ஆகையால், நான் என்னுடைய பிரியத்தையெல்லாம் வேறொருவர் மேல் மாற்ற நேர்ந்தது. அப்படி இருந்தும், நான் செய்த அந்தத் தவறுக்காக என்னை நீங்கள் தண்டித்தது ஒரு கொலைக் குற்றம் செய்தவனுக்கு ஏற்படும் தண்டனையைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகச் சொல்லலாம். அப்படி தண்டித்தும், அதே குற்றத்தை நான் மறுபடி செய்யும்படி நீங்களே தூண்டினீர்கள். இதற்காக இனி தண்டனை யார் அனுபவிக்கிறது என்பது தெரியவில்லை. உங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தினால் நான் அன்றைய தினம் உங்களுடைய சொல்லுக்கு இணங்கி இளவரசரிடம் போய், நான் வாயில் வைத்துப் பேசத் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசி, அவரை வஞ்சித்து அவருடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு வந்தேன். ஆனால், நல்ல வேளையாக அன்றைய தினம் நான்