பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 1 os என்னுடைய தேக பரிசுத்தத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன். இன்றையதினம் நான் வேறே அன்னிய புரு னிடம் போய்ச் சேராமல் தெய்வந்தான் என்னைக் காப்பாற்றியது. நீங்கள் என் விஷயத்தில் செய்யும் அக்கிரமத்தைச் சகியாமல் தெய்வமே என்னை என் பெரிய தகப்பனாரிடம் கொண்டு போய்விட்டு, நான் சொல்லாமலே அவரே எல்லா விஷயங்களையும் எளிதில் அறிந்து கொள்ளும் படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது. இனி ஒரு நிமிஷங்கூட நான் உங்களோடு இருக்கமுடியாது. அதற்கு என்னுடைய பெரிய தகப்பனாரும் இடம் கொடுக்கவே மாட்டார். நீங்களும் நானும் கூடியிருக்க விதிக்கப்பட்ட காலம் இவ்வளவுதான். இனி நாம் பிரிந்திருக்க வேண்டியதைத் தவிர வேறு எந்த ஏற்பாடும் ஒத்துவரவே வராது' என்று ஒரே முடிவாகக் கூறினாள். அவளது உறுதியான முடிவையும், அன்பற்ற சொற்களையும், என்றும் இல்லாத துணிவையும் சந்தேகமற உணர்ந்து கொண்ட மாசிலாமணிப்பிள்ளை நிரம்பவும் தடுமாற்றம் அடைந்தார். ஆனாலும், அவளை மறுபடி மிரட்டியே தமது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, "ஓ! நீ இவ்வளவுதூரம் பேசத்துணிந்து விட்டாயா!'இதெல்லாம் அந்தக் கிழவன் கொடுத்த தைரியம் என்பது நன்றாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு அந்தக் கிழவனுக்கு என்ன அதிகாரமிருக்கிறது. என்னோடு கூட இருக்கமாட்டேன் என்று சொல்வதற்கு உனக்குத்தான் என்ன அதிகாரம் இருக்கிறது. என்னுடைய பெண்ஜாதி என்னுடைய சொத்து; அவளை நான் என்னுடைய பிரியப்படி நடத்துவேன். அதைப்பற்றிக் கேட்க, எந்த நாய்க்கும் அதிகாரம் இல்லை என்பதை நீ இதற்குமுன் தெரிந்துகொள்ளாவிட்டாலும், இப்போதாவது தெரிந்து கொள். நீ இப்போது செய்த நீண்ட பிரசங்கத்தை விட இன்னும் ஒன்றரை மயில் நீளம் பிரசங்கம் செய்தால்கூட உன்னுடைய கருத்து நிறைவேறப் போகிறதில்லை. நான் உன்னை உயிரோடு