பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 7 சொல்லப் பிரியப்படுகிறேன். அதைக் கேட்க, உன் மனமும் ஆசைப்படும் என்பது நிச்சயம். அம்மாளு:- (திடுக்கிட்டு அடக்கமுடியாத வியப்படைந்து) என்ன என்ன என் தங்கை சிவபாக்கியத்தையா நீங்கள் கண்டீர்கள்? கலியான:- ஆம் ; உண்மையாகவே நான் அவளைக் கண்டேன். அவள் எல்லா விஷயங்களையும் என்னிடம் வெளியிட்டு விட்டாள். உங்களைப் பற்றிய சகலமான ரகசியங்களும் எனக்குத் தெரியும். நான் செஞ்சிக்கோட்டையில் உங்களைக் கண்டு உங்களோடு பழக்கம் செய்துகொண்டு இந்த ஊர்வரையில் உங்களோடு வந்தது தற்செயலாக நடந்த சம்பவமல்ல. நீயும் உன்னுடைய தங்கைகள் இருவரும் செய்ய உத்தேசித்துப்போகும் விபரீதக் காரியத்தினால், உங்களுக்கு எல்லாம் எப்படிப்பட்ட பெருத்த பாவமும், என்றைக்கும் அழியாத பழிப்பும், இழிவும் ஏற்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்து அப்படிப்பட்ட துன்மார்க்கத்தில் நீங்கள் செல்லாமல் தடுத்து எச்சரிக்கும் கருத்தோடு நான் வந்து வேண்டுமென்று உங்களோடு பழக்கம் செய்து கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேனே அன்றி வேறல்ல. உங்கள் விஷயத்தில் எள்ளளவும் தீங்கு நினைக்காத ஒரு பதிவிரதா சிரோன்மணியின் பெயரையும் இல்லற வாழ்க்கையையும் அடியோடு கெடுத்து, ஆயிசுகால பரியந்தம் அந்த லலிதகுமாரி தேவி ஆறாத் துயரத்தில் ஆழ்ந்து அழிந்து போகத்தக்க காரியத்தை நீங்கள் செய்வதற்கு எவ்வித நியாயமும் இல்லை என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், உனக்கே நன்றாக விளங்கும். நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை' என்றான். அவனது சொற்களைக் கேட்கவே, அம்மாளுவினது உடம்பு உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று நடுங்கியது. கணக்கிலடங்காத அபரிமிதமான வியப் பும்,