பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i2 பூர்ணசந்திரோதயம்-3 போகிறாயா? அல்லது, நாளைக்குக் காலையில் போகிறாயா என்றார். லீலாவதி, "நான் ஏறிவந்த வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டேன். அது இந்நேரம் வெகுதூரம் போயிருக்கும்; அது இருந்தால் நான் இப்போதே போகத் தடையில்லை; அதோடு என் உடம்பும், மனமும் அலுத்துத் தளர்ந்து போயிருப்பதால், இன்று ராத்திரி மாத்திரம் நான் இவ்விடத்திலேயே தனியான ஓர் அறையில் படுத்திருந்துவிட்டு விடியற்காலம் புறப்பட்டுப் போய் விடுகிறேன்" என்ற முடுக்காகப் பேசினாள். மாசிலாமணிப் பிள்ளை கோப நகை நகைத்து, ஒகோ அப்படியா! அப்படியே செய்துகொள். நீ இன்று தனியான அறையிலேயே படுத்துக்கொள். நான் வெளிக்கதவைப் பூட்டி வைக்கிறேன். நீ பத்திரமாக உள்ளேயே இரு' என்றார். லீலாவதி தனது புருஷர் அவ்வளவு தூரம் வழிக்கு வந்ததைக் கண்டு, முன்னிலும் அதிகத் துணிவும் மனோதிடமும் கொண்ட வளாய், "சரி, அப்படியே ஆகட்டும். நீங்கள் இந்த அறையைப் பூட்டியே வைக்கலாம்; நீங்கள் இனி கதவைத் திறக்காமல், என்னை இதற்குள்ளேயே வைத்துக் கொன்றுவிட்டால் கூட, அதைப்பற்றி நான் கொஞ்சமும் விசனப்படமாட்டேன்' என்று கூறினாள். தாம் அவளை அதட்டியும், பயமுறுத்தியும், அன்பாக நீண்ட பிரசங்கம் செய்தும் பார்த்தது எல்லாம் அவளது மன உறுதியைத் தளரச் செய்ய மாட் டாமல் உபயோகமற்றுப் போனதைக் கண்டு ஒருவாறு பயந்து அடங்கிப் போன மாசிலாமணிப்பிள்ளை அந்த இரவு முழுதும் அவளைத் தனியாக விட்டிருந்து மறுநாள் நயமாகப் பேசினால், அவளது கோபமும் அருவருப்பும் மாறிப் போயிருக்கும் என்றும், அவளது பழைய அன்பு திரும்பிவிடும் என்றும் நினைத்துக் கொண்டவராய், அந்த அறையை விட்டு வெளியில் போய்க்