பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115 பகிரங்கப்படுத்தித் தன்னையும் மீளாத்துன்பத்தில் மாட்டி விடுவார் என்றும் அவளுக்கு நிச்சயமாகப் பட்டன. இருந்தாலும், தான் நிரம் பவும் ஜாக்கிரதையாகத் தனது எண்ணத்தை நிறைவேற்றினால், தனது புருஷர்கடைசிவரையில் தன்னை நம்பியே இருப்பார் என்றும் தன்மீது சந்தேகம் கொள்ள மாட்டார் என்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். அப்போது மணி இரண்டாயிற்று. ஆனாலும், அவளுக்குத் தூக்கத்திலேயே மனம்செல்லவில்லை. எப்படியாவது அந்த இரவிற்குள் முயன்று தான் தனது யோசனையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிடிவாதத்தோடு அவள் எழுந்து அந்த அறை முழுவதையும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். தனது புருஷர் கதவை வெளிப்புறத்தில் தாளிட்டுத் தன்னை அவ்விடத்தில் சிறை வைத்திருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். அந்த அறையைவிட்டுத் தான் அரை நாழிகை நேரம் வெளியில் போய்விட்டு வரவேண்டியது அத்தியாவசியமாக இருந்தது. அவள் எப்படியாவது பிரயாசைப் பட்டு வெளித் தாழ்ப்பாளைத் திறந்துகொண்டு வெளியில் போய் விட்டுத் திரும்பிவந்து மறுபடியும் தாழ்ப்பாளைப் போட்டுவைக்க வேண்டியிருந்தது. அப்படிச் செய்து வைத்தால், தனது புருஷர் தன்னைப் பற்றி சந்தேகிக்கவே இடமில்லாமல் போய்விடும் என்று அவள் நினைத்து எழுந்து கதவண்டைப்போய் நின்று கொண்டு வெளித் தாழ்ப்பாளின் உட்பக்கம் எப்படியிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தாள். வெளித்தாழ்ப்பாளின் உள்பாகம் இரட்டை இரும்புத் தகடாக உள்பக்கத்தில் வந்து இருபக்கங்களிலும் மடக்கி விடப்பட்டிருந்தது. அந்த இரண்டு தகடுகளையும் நிமிர்த்தி ஒன்றாகச் சேர்த்து வெளியில் தள்ளிவிட்டால், கதவு திறந்து கொள்ளும் என்று அவள் உணர்ந்து கொண்டாள். அதற்கு வேண்டிய அனுகூலமான இரும்பு சாமான் ஏதாவது அந்த அறையில் இருக்கிறதா என்று, அவள் அங்குமிங்கும் போய்த் தேடிப் பார்த்தாள். அந்த