பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 复鱼了 புறப்பட்டு அந்த ஜாகைக்குப் போனால், அவரைப் பிடித்துக் கொள்ளலாம். அந்த பங்களாவிலிருந்து தப்பித்துப் போவதற்கு அநேகம் வழிகள் இருக்கின்றன. ஆகையால், அநேகம் ஆட்கள் வந்து அவர் சந்தேகப்படாதபடி நாற்புறங்களையும் வளைத்துக் கொண்டால், அவரை ஒரு நொடியில் பிடித்துவிடலாம். அவர் நல்ல தந்திரி. ஆகையால் போலீசார் ஏமாறிப்போகாமல் நிரம் பவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டால் அன்றி, அவர் எளிதில் தப்பி ஓடிவிடுவார். அவர் அந்த இடத்தில் இருப்பது போலீசாருக்கு எப்படித் தெரிந்தது என்ற விவரத்தை அவர் அறிந்துகொள்ளவே கூடாது. அதுவுமன்றி, இந்தக் காகிதத்தையும் போலீசார் அவருக்குக் காட்டக் கூடாது. இதன் அடியில் கையெழுத்து இல்லை. ஆனாலும், இதன் விஷயம் உண்மையாதலால் இதை அசட்டை செய்யக்கூடாது. - என்று லீலாவதி கடிதத்தை எழுதி முடித்து அதை மடித்து ஒர் உறைக்குள் போட்டு மேல்விலாசம் எழுதிக் கையில் எடுத்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டாள். அப்போது கடிகாரம் மூன்று மணி அடித்தது. தான்செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை அப்போதே செய்வதா, அல்லது சிறிது நேரம் பொறுத்துச் செய்வதா என்று யோசனை செய்தவளாய் அவள் சிறிதுநேரம் தயங்கினாள். ஆனாலும், அவள் உடனே ஒருவித முடிவு செய்துகொண்டாள். தான் தொடங்கிய காரியத்தைத் தாமதமின்றி உடனே செய்து முடித்து விடுவதே உசிதமென்று எண்ணிக்கொண்டு அவள் கூடத்தை விட்டு வெளிப்பட்டு பங்களாவின் பின்பக்கமாகப் போய், அவ்விடத்தில் தோட்டக்கார வீரப்பனும் அவனது மனைவி யான அங்காளம்மாளும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தாள். அவர்கள் இருவரும் அயர்ந்து கடுமையான நித்திரையில் ஆழ்ந்து இருந்தனர். லீலாவதி அங்காளம் மாளண்டை போய் நின்று, மெதுவாக அவளைத் தட்டி அவளது பெயரைச்