பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9 கற்பித்து, அவளுடைய வாழ்க்கையைக் கெடுப்பது பரம சண்டாளமான காரியம். இப்போதும் காரியம் கெட்டுப் போகவில்லை. இதிலிருந்து சுலபமாக விலகிக் கொள்ளக் கூடிய நிலைமையிலே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஏதடா, யாரோ வழியில் போகிற ஓர் அன்னியன் வந்து நமக்கு இவ்வளவு துரம் புத்தி புகட்டுகிறானே என்று நீ அலட்சியம் செய்யக் கூடாது' என்று நிரம்பவும் உருக்கமாகவும் ஆவேசத்தோடும் கூறினான். அம்மாளு:- (முற்றிலும் குழப்பமடைந்து நடுங்கி) அப்படி யானால், நீங்கள் சொல்லும் யோசனைதான் என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? கலியாண:- இந்தச் சதியாலோசனையிலிருந்து நீ விலகிக் கொள்வாயானால், என்னுடைய சொந்தத் தங்கையின் இடத்தில் நான் எவ்வளவு வாஞ்சை வைப்பேனோ, அதைவிட அதிக வாஞ்சை உன்னிடம் வைப்பேன். அம்மாளு :- (கரைகடந்து இளகிய மனத்தினளாய்) பூ! அவ்வளவுதானா தங்கையைப் போலத்தானாமதிப்பீர்கள்! அது ஒரு பிரமாதமான காரியமா? உங்களைப் போன்ற தமயனார் ஒருவர் வேண்டுமென்று என்மனம் ஆசைப்பட்டால் அல்லவா, நீங்கள் சொல்வது என்மனசுக்குப் பிடித்ததாக இருக்கும். நான் நாடுவது அதுவல்ல. நமக்குள் வேறுவிதமான உறவு முறைமை உண்டாக்கிக் கொடுப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், ஒருவேளை நான் உங்களுடைய பிரியப் படி நடந்து கொண்டாலும் கொள்வேன். அதைவிட்டுப் பரம ஞானிபோல, நீதி மார்க்கம் போதித்தால், அதற்கு யார்தான் இணங்கி வருவார்கள்? கலியாண:- (அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்து) ஆகா! அம்மாளு இந்த வார்த்தை யெல்லாம் சிறு பெண்ணான உன் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தையா! உன்னுடைய