பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 129 ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். தோட்டக்காரி, ஒருவேளை தனது புருஷர் கண்டுகொள்வாரோ என்ற பயத்தினால் வராமல் இருந்து விடப் போகிறாளே என்ற கவலையும் பீதியும் எழுந்து நொடிக்கு நொடி பெருகி விஷம் தலைக்கேறுவது போல அபிவிருத்தியடைந்து அவளை விவரிக்க வொண்ணாத துன்பக்கடலில் ஆழ்த்திச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது. அவ்வாறு அவள் அதற்கு மேலும் கால் நாழிகை நேரம் பொறுத்திருக்க வெளிப்பக்கத்தில் சந்தடி செய்யாமல் யாரோ நடந்து கதவண்டை வருவதாகத் தோன்றியது. அது வேலைக்காரி தானோ, அல்லது தனது புருஷரோ என்று நினைத்து லீலாவதி சகிக்க இயலாத கலவரமடைந்து சிறிதுநேரம் தவித்திருக்க, அடுத்த நொடியில் வெளிப்பக்கத்துச்சங்கிலியை யாரோ பிடித்த ஒசை மெதுவாக உண்டாயிற்று. அடுத்த விநாடியில் சங்கிலி மேலே மாட்டப்பட்ட ஒசை நன்றாகக் கேட்டது. அப்படித் தாளிட்ட மனிதர் உடனே நடந்து அப்பால் போன ஓசையும் உண்டாயிற்று. அப்போதே லீலாவதிக்கு உயிர்திரும்பியது. தான் செய்த தந்திரம் அப்போதுதான் சரிவர நிறைவேறினதாக அவள் அப்போதே நினைத்து அளவற்ற திருப்தியும் இன்பமும் அடைந்தாள். தான் கேட்டுக்கொண்டபடி அங்காளம் மளே வந்து தாளிட்டுக்கொண்டு போய் விட்டாள் என்ற நிச்யம் ஏற்பட்டுப்போகவே, அவளது பெருங்கவலையும் அச்மும் தணிவடைந்தமையால், அவள் உடனே தனது கட்டிலை அடைந்து அதற்குமேல் ஏறிப் படுத்து முற்றிலும் அலுத்துத் தளர்வடைந்திருந்த தனது மெல்லிய சரீரத்தை அன்மேல் கிடத்தினாள். நிரம்பவும் அல்லல்பட்டுக் களைத்து தளர்ந்து போயிருந்த தான் சிறிது நேரமாவது துயின்று எழுதிாலன்றி, மறுநாள் நேரப்போகும் விபரீத சம்பவத்தில் தான்னோதிடத் தோடும் சாமர்த்தியமாகவும் நடிக்க இயலாது என் எண்ணம் உண்டானது. ஆகையால், தான் எப்படியாவது பிராசைப்பட்டு துயில வேண்டும் என்ற விருப்பம் உண்டாற்று. தனது மனதில் பொங்கியெழுந்து நெடுநேரமாக தைத்து வந்த