பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பூர்ணசந்திரோதயம்-3 அபாரமான மனவெழுச்சியினாலும், கோடானு கோடி எண்ணங்களினாலும், பதை பதைத்து நின்ற அந்த விபரீதமான நிலைமையில் ஒரு வேளை துயில் உண்டாகாமல் போய் விடுமோ என்று அவள் முதன்முதலில் பயந்தாள். ஆனாலும், அரைநாழிகை சாவகாசத்தில் அவளது அங்கமெல்லாம் முற்றிலும் சோர்ந்து கனத்து உணர்வற்றுப்போக உடனே அவள் கடுமையானதுயிலில் ஆழ்ந்துவிட்டாள். அவ்வாறு அவள் நன்றாகத் தூங்கி விழித்தபோது, பொழுது நன்றாக விடிந்துபோயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள்பார்க்க, மணிஎட்டுக்குமேல் ஆகியிருந்தது. அவள் சடக்கென்று எழுந்து கட்டிலைவிட்டு விரைவில் கீழே இறங்கி அந்த அறையின் பின்புறத்தில் இருந்த ஜன்னலின் வழியாகத் தோட்டத்துப் பக்கத்தில் தனது பார்வையைச் செலுத்தினாள். அவ்விடத்தில் தோட்டக்கார வீரப்பன், வழக்கப்படி சந்தேகத்திற்கு இடமில்லாமல், வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு, அவன் கடிதத்தைக் கொண்டு போய்ப் போலீஸ் கமிஷனரினது கச்சேரியில் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும் என்று நிச்சயப்படுத்திக் கொண்டாள். அந்நேரம் போலீஸ் கமிஷனர்கடிதத்தை எடுத்துப் படித்துத் தக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பாரென்று அவள் எண்ணிக் கொண்டாள். அதற்கு மேலேதான், தான் தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி நிரம்பவும் திறமையாக நடிக்க வேண்டி வரும் என்று அவள் உணர்ந்தாள். தான் ஒன்றையும் அறியாத சுத்தமான மனிஷியென்று தனது கணவன் நினைக்கும் படி நடனம் செய்வது தன் மனதுக்கு முற்றிலும் அருவருப்பாகவும் சங்கடமாகவும் இருந்தாலும், தான் அவ்வாறு நடிக்க வேண்டுவது கட்டாயமாக இருந்தது. அன்றைய இரவு அந்த அறைக்குள் அடைபட்டிருந்ததனால், தான் படிமானத்திற்கு வந்து தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டவள்போல, அவள்