பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 131 அவரிடத்தில் நிரம் பவும் பணிவாகவும், வாஞ்சையாகவும் நடந்து கொள்ள வேண்டியதும் அத்தியாவசியமாக இருந்தது. எப்போதும் போல அவரிடத்தில் ஸரஸ்மாகவும் கொஞ்ச லாகவும் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றியும் பேசி, அவள் அவரை விட்டுப் பிரிந்து விடுவாளோ என்ற கவலையே கொள்ளாதபடி நடந்து கொள்வது நிரம்பவும் கடினமான வேலையாக இருந்தது. ஆகையால் அவள் தனது ஆடை ஆபரணங்களைத் திருத்தி அணிந்துகொண்டு அவரது வருகையை ஆவலோடும் கவலையோடும் எதிர்பார்த் திருந்தாள். சிறிது ந்ேரத்திற்கு எல்லாம் அவளது புருஷர் வெளித் தாழ்ப்பாளை விலக்கிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். முதல் நாளிரவில் அவர் அவளைவிட்டுப் பிரிந்து போனகாலத்தில் அவள் மகா மூர்க்கமாகவும் பிடிவாத மாகவும் பேசியதன்றி, அவரிடத்தில் மரியாதையின்றி அருவருப்பைத் தோற்றுவித்தாள். ஆதலால், மகாதுன்பகரமான அதே நிலைமையிலோ, அதைக் காட்டிலும் அதிக கேவலமான நிலைமையிலோ அவள் இருப்பாள் என்ற நிச்சயத்தோடு அவர் வந்தாரேயன்றி எதிர்பாராதவிதமாக அவள் மாறுதல் அடைந்திருப்பாள் என்று அவர் கனவிலும் எண்ணவில்லை. அவர் கதவைத் திறந்து அவளைப் பார்த்த ஒரே பார்வையில் அவருக்கு அவளடைந்திருந்த மாறுதல் நன்றாக விளங்கி விட்டது. அதற்குமுன் அவள் அவரைக் கண்டால் எவ்வளவு பணிவாகவும் மரியாதையாகவும் அடங்கி ஒடுங்கி பயபக்தி விநயத்தோடு நடந்து கொள்வாளோ அதைவிடப் பன்மடங்கு அதிக நற்குணம் உடையவளாகக் காணப்பட்டதன்றி முதல் நாளிரவில் தான் அவரிடத்தில் அவமரியாதையாகவும், தாறுமாறாகவும் நடந்துகொண்டது பற்றி நிரம்பவும் கிலேசம் அடைந்தவள் போலத்தோன்றினாள். அவ்வாறு அவள் முற்றிலும் மாறுபட்டிருந்ததைக்காண, தாம் காண்பது மெய்யோ பொய்யோ என்ற சந்தேகம் அவரது மனதில் தோன்றியது. அவள் ஆதியிலிருந்தேதம்மிடத்தில் அந்தரங்கமான மையலும்,