பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.34 பூர்ணசந்திரோதயம்-3 முதல் இதுவரையில் எனக்குத்துக்கமே பிடிக்கவில்லை. ஏதடா ஆத்திரத்தில் நாம் தாறுமாறாகப் பேசிவிட்டோமே என்ற விசனம் உண்டாகி என்னை எவ்வளவு தூரம் வருத்தியது தெரியுமா? நான் செய்த தவறுக்கு அதுவே போதுமான தண்டனை, நீங்கள் சொன்னதுபோல, என்னுடைய ரகசியம் எல்லாம் உங்களிடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, நான் உங்களை விட்டுப் போய், எப்படித் தப்புகிறது? உண்மை யிலேயே நான் உங்களைவிட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் பேசியவளல்ல. ஏதோமூடத்தனத்தினால் உளறிவிட்டேன். எப்படியிருந்தாலும், உங்கள் இடத்தில் லயித்துப் போயிருக்கும் என் மனசு இவ்வளவு எளிதில் மாறிப்போய் விடுமா? அது ஒருநாளும் மாறாது. ஒரு முக்கியமான ஆபத்துச் சமயத்தில் உங்களுக்கு என்னுடைய உதவி அத்தியாவசியமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதா? இப்பேர்ப்பட்ட அசந்தர்ப்பவேளையில் உங்களைக் கைவிட்டுப் போக எனக்குத்தான் மனம் வருமா? ஒரு நாளுமில்லை. பிரிந்துபோக வேண்டும் என்று நான் சொன்னேன் என்பதையே மறந்துவிடுங்கள்' என்று நயமாகவும், உருக்க மாகவும் கூறியவண்ணம் நிரம்பவும் வாஞ்சையாக அவர் மீது சாய்ந்து கொண்டாள். மாசிலாமணிப் பிள்ளை ஆனந்த பரவசம் அடைந்தவராய், 'ஆம்: ஆம்; உண்மைதான். உன்னுடைய மனசு எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியாதா? நேற்று ராத்திரி உன்னைத் தனியாக விட்டுப் போவதற்கு நான் ஏன் சம்மதித்தேன் தெரியுமா? நீ கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் உன்னுடைய கோபம் தணிந்துபோய் விடும் என்றும், உன்னுடைய பழைய பிரியம் திரும்பி விடும் என்றும் நினைத்தே நான் அப்படிச் செய்தேன். அதுவும் இல்லாமல், நீ சொன்ன கடைசி விஷயத்தைப் பற்றி நினைத்து நானும் கவலைப்பட்டேன். எனக்காக எவ்வளவோ பாடுபட்டுத் தந்திரம் செய்து இளவர