பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் + 43 அதைக் கேட்டுக் கொண்டு தோட்டக்காரி வெளியில் போய்விட்டாள். அப்போது நிரம்பவும் கலவரமும் கலக்கமும் அடைந்தவராகக் காணப்பட்ட மாசிலாமணிப் பிள்ளை தமது மடியில் பத்திரமாக வைத்துக்கொண்டிருந்த ஒரு திறவுகோலை எடுத்து லீலாவதியினிடத்தில் கொடுத்து, "இந்தா, இதை நீ பத்திரமாக வைத்துக்கொள். இந்த மனிதன் என்னைப் பிடித்துக் கொண்டு போகிறதற்காக வந்தவனாக இருந்தால், நீ உடனே நம்முடைய படுக்கை அறைக்குப்போய், என்னுடைய கைப் பெட்டியைத் திற; அதற்குள் இளவரசர் கையெழுத்திட்ட தஸ்தாவேஜை நான் வைத்திருக்கிறேன். அதை நீ உடனே எடுத்து ஜாக்கிரதையாக மடியில் சொருகிக் கொள். ஏனென்றால், என்னை ஒரு வேளை சிறைப்படுத்தி அழைத்துக்கொண்டு போக நேர்ந்தால், அவர்கள் வீட்டையும் சோதனை போட்டுப் பார்ப்பார்கள். அதோகாலடியோசைகேட்கிறது. அந்த மனிதன் வந்துவிட்டான்' என்று அவசரமாகக் கூறியவண்ணம், அவளிடம் திறவுகோலைக் கொடுத்துவிட்டார். உடனே லீலாவதி நிரம்பவும் பதைத்தவளாய், 'மெத்தையின் மேல் அண்ணாசாமி நாயக்கன் இருக்கிறானே அவனை என்ன செய்கிறது! இதனால் அவனுக்கும் ஏதாவது கெடுதல் உண்டாகுமோ?' என்று அளவற்ற கவலையோடு வினவினாள். மாசிலாமணிப் பிள்ளை, 'இவர்கள் என்னைப் பிடித்துக் கொள்வார்களானால், வீட்டைச் சோதிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்' என்று தணிவான குரலில் பேசினார். அந்தச்சமயத்தில் அங்காளம்மாள் ஒரு மனிதரை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். வந்தவள் அந்த மனிதரை கூடத்தில் விட்டு உடனே வெளியில் போய்விட்டாள். லீலாவதி ஒரு பக்கமாக விலகி நின்றாள்; அவளும் மாசிலாமணிப் பிள்ளையும் நிரம்பவும் ஆவலோடும், வியப்போடும் அந்த மனிதரது முகத்தை உற்று நோக்கிஆராய்ச்சி செய்தனர். ஆனால், அந்த மனிதர் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர் என்று o,.3.Hi-10