பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பூர்ணசந்திரோதயம்-3 சந்தேகிக்கத்தக்க எத்தகைய குறிப்பாவது கபடப் பார்வையாவது பயங்கரமானதோற்றமாவது அவரிடத்தில் காணப்படவில்லை. அப்படி இருந்தாலும் மாசிலாமணிப்பிள்ளையின் மனம் ஒருவாறு சஞ்சலம் அடைந்து கொண்டே இருந்தது. லீலாவதியோ, அந்த மனிதன் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள். கூடத்தில் வந்த மனிதர் மாசிலாமணிப் பிள்ளையைப் பார்த்து நிதானமாகவும் நயமாகவும் பேசத்தொடங்கி, "ஐயா! இப்படிக் கபடமாக வந்து என்னுடைய கடமையை நிறைவேற்ற நேர்ந்ததைப் பற்றி நான் நிரம்பவும் விசனப்படுகிறேன். நீங்கள் என்னை எதிர்ப்பதில் கொஞ்சமும் பிரயோசனமில்லை. என்னுடைய மனிதர்கள் இந்தப் பங்களாவின் நான்கு பக்கங்களிலும் வந்து சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்' என்று அழுத்தமாகக் கூறினார். எதிர்பாராத அந்த வார்த்தைகளைக் கேட்கவே, மாசிலாமணிப்பிள்ளை என்ன மறுமொழி சொல்வது என்பதையாவது, என்ன செய்வது என்பதையாவது அறியாமல் அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து போய் விட்டார். லீலாவதியோ தான் நடித்து ஸாகலம் செய்வதற்கு அதுவே சரியான சமயம் என்று நினைத்து, சகிக்கவொண்ணாத திகில் கொண்டவள்போல மகாவிபரீதமாகத் தனது முகத்தை மாற்றிக் கொண்டு தனது கைகளைப் பிசைந்துகொண்டு, "ஐயையோ! தெய்வமே என்ன செய்யப்போகிறேன்! என்னுடைய புருஷரைக் கொண்டுபோக யாரோ வந்துவிட்டார்களே! இவரை விட்டுப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழப் போகிறேன்! ஐயோ! என் தேகம் பதறுகிறதே! என் மனம் தவிக்கிறதே! என் உயிர் துடிக்கிறதே! என் புருஷரைக் கொண்டுபோய் இவர்கள் என்ன செய்வார்களோ தெரியவில்லையே! என் கண் காண இவரை நீங்கள் கொண்டுபோக நான்விடமாட்டேன். என்னை முதலில் வெட்டிப் போட்டுவிட்டு அதன்பிறகு உங்கள் பிரியப்படி செய்து