பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮46 பூர்ணசந்திரோதயம்-3 சாதாரண மனிதர்போல ஆடைகள்தரித்து வந்திருந்தார். அவரும் லீலாவதியைப் பார்த்து, 'ஆம் அம்மா! நீங்கள் அப்பால் போவதே நல்லது என்று நயமாகக் கூறினார். அப்போதும் மாசிலாமணிப் பிள்ளையைத் தான் பிடித்த பிடியை விடாமல் கண்ணிர் சொரிந்தவண்ணம் வெகு சாமர்த்தியமாக அழுது நடித்த லீலாவதி இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “ஏன் ஐயா என்னை அப்பால் போகச் சொல்லிவிட்டு, நீங்கள் என் புருஷரை அழைத்துக் கொண்டு போகப் போகிறீர்களா?" என்று நிரம்பவும் பரிதாபகரமாக வினவினாள். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், 'இல்லையம்மா இவரை நாங்கள் அழைத்துக்கொண்டு போவதற்குமுன் நீங்கள் மறுபடியும் இவரைப் பார்க்கலாம். எங்களுக்கு அவசரம் ஒன்றும் இல்லை. கொஞ்சநேரம் பொறுத்துத்தான் அழைத்துக் கொண்டு போகப் போகிறோம்” என்று நிதானமாகப் பேசினார். அதைக்கேட்ட லீலாவதி நிரம்பவும் சஞ்சலம் அடைந்தவள் போலக் காணப்பட்டாள். ஆனாலும், இன்ஸ்பெக்டருடைய உத்தரவுப்படி நடந்துகொள்ள வேண்டியவள் போல நடித்து, “சரி; அப்படியானால் உங்களுடைய பிரியப்படி நான் அப்பால் போகிறேன்; ஆனால் அங்கே அதிகநேரம் இருக்க மாட்டேன்; ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவேன். அதற்குள் நீங்கள் பேச வேண்டியதைப் பேசுங்கள்' என்று கூறியவண்ணம் அரை மனதோடு தனது புருஷரை விட்டுப் பிரிந்து விரைவாக தனது சயன அறைக்குள் சென்று அவ்விடத்தில் கட்டிலின் அடியில் மறைவாக வைக்கப்பட்டிருந்த மாசிலாமணிப் பிள்ளையின் கைப் பெட்டியை மெதுவாகத் திறந்து அதற்குள் இருந்த த ஸ்தாவேஜியை எடுத்துத் தனது இடையில் சொருகி பத்திரப்படுத்திக்கொண்டு பெட்டியை மூடி மறுபடியும் பூட்டித் திறவுகோலைப் பெட்டியின் மேலேயே வைத்துவிட்டுக் கதவண்டை வந்து மறைவாக நின்று, கதவிலிருந்த இடுக்கின் வழியாக வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துக்