பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 量47 கொண்டிருந்தாள். அதுவரையில் அவள் காட்டிய விசனமும் அழுகையும் மாறிப்போக, கட்டிலடங்கா மூர்க்கமும் கொதிப்பும் தலைகாட்டத் தொடங்கின. அவள், 'இப்போது தான் என்னுடைய எண்ணம் பூர்த்தி அடைந்தது. என்னைப் படுத்திவைத்த பாடெல்லாம் வீணாய்ப் போகுமா? எல்லா வற்றிற்கும் வட்டியும் முதலுமாக நான் என் பழியைத் தீர்த்துக் கொள்ளுகிறேன். இவ்வளவு தூரம் நான் ஸாகலம் செய்து இவருடைய நம்பிக்கையைத் திருப்பாது இருந்தால், இந்த தஸ்தாவேஜியை இவர் என்னிடத்தில் கொடுத்திருக்கவே மாட்டார். இவர் இதை இன்ன இடத்தில் வைத்திருக்கிறேன் என்று கூட இதுவரையில் சொல்ல மறுத்தவர் அல்லவா! இருக்கட்டும். இவருடைய உயிரைத் தப்ப வைக்கக்கூடிய விலை மதிப் பற்ற இந்த தஸ்தாவேஜு என் வசத்துக்கு வந்துவிட்டது. இனி இவர் தப்புவதில்லை. இன்னம் சில தினங்களில் இவர் எப்படியும் ஒரு மாதிரியாக ஒழிந்து போய் விடுவார். அதன்பிறகு நான் பிச்சை எடுத்தாவது மானமாகவும் சுயேச்சையாகவும் இருந்து பிழைக்கிறேன்' என்று தனக்குத்தானே எண்ணமிட்டு நிரம்பவும் குதுகலமும் மனவெழுச்சியும் அடைந்தவளாய் நின்றாள். அவ்வாறு அவள் கால்நாழிகை நேரம் நின்று கொண்டிருந்த பின், மறுபடியும் விசனத் தோற்றத்தையும் கண்ணிரையும் வருவித்துக் கொண்டு தனது தலைமயிரை அலங்கோலமாக விரித்துவிட்டுக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு கூடத்திற்கு வந்து சேர்ந்தாள். அப்போது இன்ஸ்பெக்டரைத் தவிர வேறு இரண்டு ஜவான்களும் வந்து நின்று கொண்டி ருந்தனர். மாசிலாமணிப் பிள்ளைக்குச் சமையற் காரி ஒரு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனாள். அவர் அதை மடமடவென்று குடித்து, பயத்தினால் காய்ந்து போயிருந்த தமது நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தார். லீலாவதி மெதுவாக நடந்து அவர் இருந்த இடத்திற்குப்போய் தாங்க இயலாத பரம விசனத்தினாலும்