பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 உடனே மாசிலாமணிப்பிள்ளை லீலாவதியை அழைத்துக் கொண்டு சிறிது தூரத்தில் ஒரு மூலையிலிருந்த கம்பத்தின் மறைவிற்குப் போய் நின்று, 'தஸ்தாவேஜியை எடுத்து ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டாய் அல்லவா?’ என்று மகாராஷ்டிர பாஷையில் நிரம் பவும் தணிவான குரலில் வினவினார். லீலாவதி, "ஒ எடுத்து வைத்துக் கொண்டேன். எதை மறந்தாலும் அதை மறப்பேனா? அதில்தானே நம்முடைய உயிரே அடங்கியிருக்கிறது என்று துடியாக மறுமொழி கூறினாள். - மாசிலாமணிப்பிள்ளை, சரி; நல்லதாயிற்று. ஆனால், இவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனை போட மாட்டார்கள் போலிருக்கிறது. இங்கே சோதனை போடுவதற்கு என்ன இருக்கிறது? அவர்களுடைய எண்ணம் என்னைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்பது; அதுதான் நிறைவேறி விட்டது. அவர்கள் வேறே எதையும் நாடவில்லை. இங்கே முதலில் வந்த மனிதர் ரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டராம். நான் இங்கே இருக்கிறேன் என்பதை இவர் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார் என்பதைத்தான் அறிந்து கொள்ளக்கூட வில்லை. மெதுவாக நான் அதைப்பற்றி இவரிடத்திலேயே கேட்டுப் பார்த்தேன்; இவர் சொல்லமாட்டேன் என்கிறார்" என்றார். லீலாவதி, "ஒருவேளை நீங்கள் எப்போதாவது வெளியில் போனபோது, உங்களுடைய அடையாளத்தைக் கண்டுபிடித்து உங்களோடு தொடர்ந்துவந்து நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்பதை இவர் கண்டுகொண்டிருப்பார். எப்படியானால் என்ன? காரியம் என்னவோ விபரீதத்துக்கு வந்துவிட்டது. அதைப்பற்றி நாம் பேசி நம்முடைய பொழுதைக் கழிப்பதில் பயனில்லை. இனி நடக்க வேண்டிய முக்கியமான காரியங்களைப் பற்றி நாம் பேசி ஒருவித ஏற்பாடு செய்து