பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153 மாசிலாமணிப்பிள்ளை, "சரி; அப்படியே செய். அதுதான் நமக்குப் பலவகையிலும் அநுகூலமானது. உன்னுடைய பேருதவியினாலும் தெய்வச் செயலினாலும் நான் மாத்திரம் உயிர் தப்பி மறுபடியும் சுயேச்சையாக வந்து விட்டால், நீதான் எனக்கு உயிர் கொடுத்த உத்தமியென்பதை நான் என் ஆயிசுகால பரியந்தம் மறக்கவே மாட்டேன். உன்னை என்னுடைய இருதயமாகிய கோவிலில் வைத்து, சதாகாலமும் பூஜித்து வருவேன் என்பதை நீ வேத வாக்கியமாக எண்ணிக் கொள்ளலாம்' என்று நிரம்பவும் உருக்கமாகவும், வாஞ்சை யாகவும் கூறி அவளை இன்னொரு முறை கட்டித் தழுவினார். லீலாவதியும் கட்டிலடங்காத சஞ்சலமும் கலக்கமும் அடைந்தவளாய்த் தோன்றி, "என்னவோ எல்லாவற்றிற்கும் சுவாமி இருக்கிறார். இன்னம் ஒரு மாத காலத்துக்குள் அவர் இந்தக் கஷ்டங்களை எல்லாம் அடியோடு நிவர்த்தி செய்து விடுவார் என்று நம்பியிருக்கிறேன்' என்று கூறி, அவரைக் காட்டிலும் அதிக நெகிழ்வோடு அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாள். அந்தச் சமயத்தில் இன்ஸ் பெக்டர் மாசிலாமணிப் பிள்ளையை அழைக்க அவர்கள் இருவரும் திடுக் கிட்டு ஒருவரை யொருவர் விட்டுப் பிரிய மனமற்றவராய்க் கடைசியில் பிரிந்து போயினர். லீலாவதி அதுவரையில் நடித்ததை எல்லாம்விட நூறு மடங்கு அதிகமாக நாட்டியமாடி அலங்கோலமாக விழுந்து அழுது அடித்துக் கொண்டு பிரலாபித்துக் கண்ணிரை ஆறாக ஓடவிட்டுத் துயரக்கடலில் மிதந்துகொண்டிருந்தவளாய்த் தனது அருமை மணாளரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தாள்.