பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பூர்ணசந்திரோதயம்-3 சாமண்ணாராவ் என்ற பெயருடைய மனிதன் தனது எஜமானர் சொன்ன புகழ்ச்சி மொழிகளைக் கேட்டு அவ்வளவாக மகிழ்ச்சியடையாதவன்போலத் தோன்றினான். ஆனாலும், அவருக்கு மரியாதையாகவும் பணிவாகவும் மறுமொழி சொல்லத் தொடங்கி, "போனமாகத்தோடு எனக்கு இரண்டரை வருஷத்துக்குச் சம்பளம் சேரவேண்டும்; அவ்வளவுதான். அதிகம் ஒன்றும் இல்லை' என்றான். அவன் மறுமொழி கூறிய மாதிரியிலிருந்து அவன் தனது சம்பளம் நெடுங்காலமாகக் கொடுக்கப்படாததைப்பற்றி அவரிடத்தில் அளவற்ற ஆத்திரமும் அருவருப்பும் கொண்டிருந்ததும்,ஆனால் அந்தச் சமயத்தில் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை என்பது நன்றாகத் தெரிந்தன. பாளையக்காரர் நிரம்பவும் குத்தலாகத் தோன்றிய அவனது மொழியைக்கேட்டு, அதன் உட்கருத்தை உணராதவர்போல நடித்து, "சரி, அவ்வளவுதானே அது ஒரு பெரிய தொகையல்ல. நான் எவ்வளவோ பெருத்த பெருத்த தொகைகளைக் கடன்வாங்கி இருக்கிறேன். கடன்காரர்கள் என்னை எப்படியும் பிடித்துச் சிறைச்சாலையில் வைக்கப்போகிறார்கள். நாட்டுக் கோட்டைக் கதிரேசன் செட்டியார் என்னைப்பிடிக்க வாரண்டு வாங்கியிருக்கிறதாகச் சிலர் சொல்லக் கேள்வியுற்றேன். கடனோடு கடனாக இன்னம் யாராவது ஒர் ஏமாந்த மனிதனைப் பிடித்து அவனிடத்தில் கடன் வாங்கி உனக்குச் சேரவேண்டிய பாக்கியை எப்படியாவது நாளைக்குள் கொடுத்து விடுகிறேன். அதைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்' என்று சமாதானமாகக் கூறினார். - உடனே சாமண்ணாராவ் குனிந்து தனது எஜமானரை வணங்கி, 'இந்த வாக்குறுதியை எஜமானர் மறந்துவிடாமல் எப்படியாவது நிறைவேற்றிவைத்தால் உதவியாக இருக்கும். நான் நிரம்பவும் ஏழை; பிள்ளைக்குட்டிக்காரன். சோற்றுக்கு இல்லாமல் எல்லோரும் பட்டினி கிடந்து சாகிறோம்' என்று மறுமொழி கூறினான்.