பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 அதைக் கேட்டுக் கொண்டே பாளையக்காரர் அவனுக்கு மறுபடியும் உறுதி கூறியபின் அவ்விடத்தைவிட்டு அப்பால் போய்விட்டார். உடனே சாமண்ணாராவ் தனது பற்களைக் கடித்துக்கொண்டு தனக்குள்ளாகவே அவரைப்பற்றி தூவிக்க ஆரம்பித்து, அயோக்கியன். மோசக்காரன். இவனுக்கு இந்த ஊரில் இனிமேல் எந்த முட்டாள் கடன்கொடுக்கப் போகிறான். நான் இவனிடத்தில் இனி மேல் பணத்தையாவது காணுகிற தாவது. இவன் இனிமேல் தப்புகிறதாகத் தோன்றவில்லை. இன்றையதினம் காலையில் வந்து இவனைப் பற்றிய விவரங்களையெல்லாம் விசாரித்து விட்டுப்போன மனிதன் கச்சேரியைச் சேர்ந்த அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அவன் வந்துவிட்டுப்போன சங்கதியை நான் இவனிடத்தில் சொல்லவே இல்லை. என்னவோ விவரிதந்தான் நடக்கப் போகிறது. இருக்கட்டும்; நடக்க நடக்க எல்லாம் தெரிந்து போகிறது என்ற தனக்குள் எண்ணமிட்டவனாய் ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். அவனை விட்டுச் சென்ற சூரக்கோட்டைப் பாளையக்காரர் கூடத்தில் இருந்த அழகான ஒரு நிலைக்கண்ணாடிப் பக்கம் போய் நிற்க, அதற்குள் பிரதிபிம்பித்துத் தோன்றிய சரவிளக்குகளும், பூச்செடிகளும், படங்களும், பதுமைகளும் அற்புதமாகத் தோன்றிக் கண்ணைப் பறித்தன. ஆகையால், அவர் அவைகளையும், அவைகளினிடையில் மகாஜாஜ்வல்லியமான ஆடையாபரணங்களை அணிந்து நின்ற தமது வடிவத்தையும் பார்த்துப் பிரமித்து நின்று, தமது அழகையும் வசீகரத்தன்மை யையும் கண்டு தம்மைத் தாமே மெச்சி ஆனந்த பரவசம் அடைந்தவராய், "ஆகா! நான் எவ்வளவு அழகாயிருக்கிறேன்! இந்த நிலைமையில் அந்தப் பூர்ணசந்திரோதயம் என்னைப் பார்த்தால், உடனே மயங்கி என்மேல் மோகம் கொள்வாள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சந்தேகமே இல்லை' என்றும் வேறு பலவாறும் எண்ணமிட்டவராய் நின்று கொண்டிருந்தார்.