பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பூர்ணசந்திரோதயம்-3 அவ்வளவிலும் அவரது மனம் ஒருவித சஞ்சலத்தை அடைந்து தவித்துக்கொண்டிருந்தது. உடம்பு ஒய்வின்றித் தவித்துக் கொண்டிருந்தது. தாம் அன்றைய தினம் உன்னத ஸ்தானத்தி லுள்ள பெரிய மனிதர்களுக்கு விருந்து நடத்தப் போகும் தருணத்தில், கேவலம் ஒரு வர்த்தகருடைய மகளான தமது மனைவி தம்மோடுகூட அந்த வீட்டில் இருப்பது தமது மேம்பாட்டுக்கு ஒருவித இழுக்கை உண்டாக்கும் என்று நினைத்த அந்தப் பாளையக்காரர் அவளை அன்றைய தினம் பிற்பகலிலேயே, அந்த ஊரிலுள்ள அவளது மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அந்த விருந்திற்கு வேண்டியிருந்த பெருத்த பணத்தொகையைச் சேகரம் செய்வதற்கு, அந்த மனைவியின் கழுத்தில் கடைசியாக மிஞ்சியிருந்த வைரமணியையும் அவள் கழற்றிக் கொடுக்க நேர்ந்தது. ஆனாலும், அவள் மாத்திரம் அந்த வீட்டில் இருப்பதற்கு அருக மற்றவளாக மதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாள். அன்றைய தினம் அத்தனை சிறப்பான ஏற்பாடுகளோடு அந்த அபாரமான விருந்தைத் தயாரித்ததனால் உண்டான குதுகலமும் இன்பமும் ஒருபுறம் இருக்க, தமது அப்போதைய சங்கடமான நிலைமையையும், அன்றையதினம் தாம் செய்யத் தீர்மானித்தி ருந்ததுணிகரமான காரியத்திலிருந்து உண்டாகக் கூடிய துன்பங் களையும் நினைக்க நினைக்க, அவரது மனதில் துன்பங்களும் சஞ்சலங்களுமே அதிகமாக மிஞ்சி நின்றன. உண்மையில் அந்த மனிதர் எப்படிப்பட்ட மோசடியான காரியத்திற்கும் இணங்கக் கூடிய மனிதராக இருந்தாலும், அதைத் தாமே நிறைவேற்றி வைப்பதற்குரிய துணிவும் மனோதிடமும் அவரிடம் இல்லை. ஆகையால், அந்த விருந்து நடக்கவேண்டிய காலம் நெருங்க நெருங்க, அவரது மனமும் உடம்பும் அதிகமாக நடுங்கித் தவிக்கலாயின. அவர் அத்தகைய பரம சங்கடமான நிலைமையில் இருக்க மணி சரியாக எட்டு ஆயிற்று. ஒரு பீடன் வண்டி அவரது வீட்டு