பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

温6○ பூர்ணசந்திரோதயம்-3 என்றும் நீங்கள் எழுதியிருந்ததைப் பார்க்கவே, எனக்கு அப்படிப்பட்ட ஆச்சரியம் தோன்றியது. அதைப் பார்த்தவுடனே, நான் என்ன அர்த்தம்செய்து கொண்டேன் தெரியுமா? அற்புத ரூபிணியான பூரணசந்திரோதயத்தின் பிரியத்துக்கு நீங்கள் ஒருவரே பாத்திரர் ஆனவர் என்ற எண்ணமே என் மனசில் உண்டாயிற்று?' என்றார். பாளையக்காரர் தற்பெருமையும் மகிழ்ச்சியும் முகத்தில் ஜ்வலிக்கப் பெற்றவராய் இனாம் தாரரை நோக்கி, 'ஆம்: அப்படி இல்லாவிட்டால், நான் துணிந்து இந்தக் காரியத்தை நடத்துவேனா? இன்னம் கொஞ்சநேரம் போனால், விவரம் எல்லாம் நன்றாக விளங்கிப் போகிறது. முதலில் விருந்து நடக்கட்டும். மற்ற சங்கதியெல்லாம் உடனே தெரிந்து போகிறது' என்றார். அப்போதும் ஆச்சரியம் அடங்காதவராகக் காணப்பட்ட இனாம்தார், “என்ன இருந்தாலும், நீங்கள்சாமர்த்தியசாலிதான். ಆಹಖL076T அம்சங்களிலும் நம் எல்லோரையும் விடப் பதினாயிரம் மடங்கு சிரேஷ்டமான இளவரசர் இருக்கிறார். அவரைக்கூட அந்தப் பூர்ணசந்திரோதயம் மதியாமல் உங்களிடம் மோகம் கொண்டதுதான் உங்களுடைய கீர்த்திப் பிரதாபத்தை நன்றாக விளக்குகிறது. உண்மையில் காரியம் இப்படி நடந்திருக்க, இதைவிட்டு ஜனங்கள் பல பல மாதிரியாகப் பேசிப் புரளி செய்கிறார்கள். இளவரசருக்கும் பூரண சந்திரோதயத்துக்கும் அந்தரங்கமான நட்பு ஏற்பட்டுப் போனதாகவும், அவர் அவளைக் கொண்டுபோய் ஏழாவது உப்பரிகையில் வைத்துக் கொள்ளப் போகிறதாகவும் சிலர் சொல்ல நான் கேள்வியுற்றேன். உங்களுக்கு அவள் ஏற்கெனவே வசப்பட்டுப் போனவள் என்பதை அறியாமல் இளவரசர் ஒருவேளை அவளை அழைத்துக் கொள்ளத் தீர்மானித்திருப்பார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அவரும் இப்போது இங்கே வரப்போகிறார் அல்லவா? அப்போது அவருடைய