பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 量岛货 மனசுக்கு இதெல்லாம் எப்படி இருக்குமோ பார்க்கலாம். தாம் எப்படிப்பட்ட மனிஷியை அழைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை அவர் இப்போது நேரிலேயே தெரிந்து கொள்ளட்டும்’ என்றார். அவ்வாறு அவர் பேசி முடித்த சமயத்தில் கலியாணபுரம் ஜெமீந்தாரை சாமண்ணாராவ் அழைத்துக் கொணர்ந்து உள்ளே சேர்க்க, அவரும் உபசரிக்கப் பெற்று ஆசனத்தில் அமர்ந்தவராய்ப்பாளையக்காரரை நோக்கிப் புன்னகை செய்து, ‘'என்ன பாளையக்காரரே, இந்த விஷயம் உண்மையானது தானா? அல்லது ஏதாவது கருத்தை மனதில் வைத்துக்கொண்டு செய்யப்படும் தந்திரமா? நீங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்த முதல் என் மனசில் ஒரு பெரிய சந்தேகம் எழுந்து, நீங்காமலேயே இருந்து வந்தது. இந்த விருந்து உண்மையிலேயே நடக்கப் போகிறதா, அல்லது, நீங்கள் வேடிக்கைக்காக அப்படி எழுதியிருக்கிறீர்களா என்ற சந்தேகம் இந்த நிமிஷம் வரையில் இருந்தது. இப்போது இந்த ஏற்பாடுகளை எல்லாம் நாம் பார்த்தபிறகுதான், அந்தச் சந்தேகம் தீர்ந்தது. ஏதடா நம்மைப் பற்றி இவர் இப்படிப்பட்ட சந்தேகத்தைக் கொள்கிறாரே என்று நினைத்து நம்முடைய பாளையக்காரர் என்மேல் ஆயாசப் படக்கூடாது. என் மனசு நினைத்ததை நான் மறைக்காமல் உள்ள படி வெளியிட்டுவிட்டேன்' என்றார். அதைக் கேட்ட இனாம்தார், 'ஆம்; நீங்கள் சந்தேகப்பட்டது போலவே நானும் சந்தேகப்பட்டேன். இளவரசரைப் பற்றி நாம் கேள்வியுற்ற சங்கதியை இப்போதுதான் இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் இன்றையதினம் இங்கே வந்தால், அவருக்கு எப்படிப்பட்ட மானக்கேடு நேரும் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்றார். கலியாணபுரம் மிட்டாதார், 'இளவரசர் இந்த விருந்துக்கு வருவார் என்றே நான் நினைக்கவில்லை. தாம் தோற்றுப் போன ஒர் அவமானமே போதாதா? அதோடு, நம்முடைய