பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13 அப்படி இருக்க, உங்களுடைய வார்த்தைக்கு மாத்திரம் நான் எப்படி சரியான உத்தரம் சொல்லமுடியும்? அது இல்லையானால், இதுவும் இல்லைதான். கலியாண:- அம்மாளு! நீ விஷயத்தை நன்றாக கிரகித்துக் கொள்ளாமல் அவசரப்பட்டுப் பேசுகிறாய். நீ பிரஸ்தாபிக்கும் துன்மார்க்கத்துக்கு நான் இணங்கிவராவிட்டால், எங்க ளுடைய சதியாலோசனையை நிறைவேற்றியே தீருவேன் என்கிறாயே? அது சரியான வாதமாகுமா? நீ அப்படிச் - சொல்லிவிட்டதனாலேயே உங்களுடைய எண்ணம் பலிதமாகி விடுமா? இந்த விஷயத்தில் எவ்வளவோ பிரயாசை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த நான் நீ சொல்வதைக் கேட்டுக் கொண்டு இப்படியே திரும்பி ஊருக்குப் போய் விடுவேன் என்று நினைக்கிறாயா? உங்களுக்கு எவ்வித இழிவாவது, துன்பமாவது நேராமல் இந்தக் காரியத்தை முடிக்க வேண்டுமென்ற தயாள எண்ணத்தோடு நான் முதன் முதலில் வந்து உங்களுக்கு விஷயத்தை எடுத்துச் சொல்ல இங்கே வந்தேனே அன்றி வேறல்ல. நீங்கள் என்னை அலட்சியம் செய்து என் வார்த்தையை உல்லங்கனம் செய்துவிட்டால், அதன்பிறகு நான் உங்களை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்த எனக்கு அதிகாரமில்லை. நான் உடனே புறப்பட்டு உங்களுக்கு முன்னால் பூனாவுக்குப் போய் எனக்குத் தெரிந்த சில மனிதரைக் கொண்டு லலிதகுமாரி தேவியினிடத்தில் சகலமான விஷயங்களையும் தெரிவித்து, அவளை எச்சரித்து வைக்கப் போகிறேன். அதற்குமேல் நீங்கள் போய் அவ்விடத்தில் கிடைக்கும் மரியாதையைப் பெற்றுக் கொண்டு _ஊருக்குத் திரும்பிப் போகப் போகிறீர்கள். அவ்வளவோடும் இந்த விஷயம் நிற்கப் போகிறதில்லை. லலிதகுமாரி தேவி இந்தச் சதியாலோசனையின் விவரங்களை எல்லாம் தஞ்சையி லுள்ள பெரிய ராணிக்கு எழுதி அனுப்பவும் நேரும். அதனால் உன் தாயாருக்கும் உங்களுக்கும் என்னென்ன லாப நஷ்டங்கள் ஏற்படும் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட