பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 உள்ளேபேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் கணிர்கணிரென்று வந்து அவர்களது காதில் மோதியது. விருந்தினர் எல்லோரும் விருந்தின் சுகத்தினால் ஆனந்த பரவசம் அடைந்து மெய்மறந்து குதூகலவசம் ஆகி இருந்தனர். பாளையக்காரர் செய்திருந்த மகா துணிகரமான சதி ஆலோசனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் ஆரம்பமாயிற்று. அவர் எழுந்து பேசித் தமது ரகசியத்தை வெளியிடப் போகிறார் என்பதைக் கண்ட மற்ற ஐவரும் மிகுந்த ஆவலோடு அவரது வாயைப் பார்த்தவண்ணம் இருந்தனர். அவ்வாறு எழுந்து நின்ற பாளையக்காரர், மகாராஜாவே! பிரபுக்களே! நண்பர்களே! இன்றைய தினம் இந்த விருந்து எதைக்குறித்து நடத்தப்பட்டது என்பதைப் பற்றி நான் என்னுடைய அழைப்புக் கடிதத்திலேயே ஒருவாறு எழுதித் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். அது சம்பந்தமாக நாம் கிரமப்படி மிகுதியிருக்கும் சடங்குகளை நிறைவேற்ற வேண்டுவது அவசியமாக இருக்கிறது. இப்போது நடக்கப்போகும் விசாரணையில் நான் ஒரு வாதியின் ஸ்தானத்தில் இருப்பதால், என்னுடைய வாதத்தைக் கேட்டுச் சரியான தீர்மானம் சொல்ல பட்சபாதம் இல்லாமல் நடந்து கொள்ளும் ஒர் அக்கிராசனாதிபதியை நாம் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகையால் எல்லா அம்சங்களிலும் தகுதியுடைய வரான நமது ஜெமீந்தார் ஐயாவை அக்கிராசனராக வைக்க வேண்டும் என்று நான் பிரரேபிக்கிறேன்' என்று கூறிவிட்டுக் கீழே உட்கார்ந்து கொண்டார். அதைக் கேட்ட இளவரசர், 'நிரம்பவும் தகுதியான யோசனை! இந்தப் பிரரேபணையை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஜெமீந்தார் ஐயா! எழுந்து அந்த உயர்ந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்' என்றார். அதைக் கேட்ட மற்ற மூவரும் கைகொட்டி நகைத்து அதை ஆமோதிக்க, உடனே ஜெமீந்தார் எழுந்துபோய் அவ்விடத்தில்