பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 15 தாயாருக்குக் கடிதம் எழுதியனுப்பி விடுகிறேன். இது போதுமல்லவா? கலியாண:- அதுகூட என்மனசுக்குப் பிடிக்கவில்லை.நீங்கள் லலிதகுமாரி தேவியினிடம் வேலையிலமர்ந்திருப்பதே சரியல்ல. ஆகையால், நீங்கள் இப்படியே ஊருக்குத் திரும்பி விட வேண்டும். - அம்மாளு :- (முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த பிரமிப்படைந்து) நீங்கள் சொல்வது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது! நாங்கள் வேலையில் அமர்ந்து ஒழுங்காக நடந்து கொள்ளுகிறோம் என்று நாங்கள் செய்யும் வாக்குறுதியை நீங்கள் ஒப்புக் கொள்ளாததைப் பார்த்தால் எங்களிடத்தில் உங்களுக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை என்றல்லவா ஏற்படுகிறது. ஊரார் எல்லோரும் அறிய இவ்வளவு தூரம் வந்த நாங்கள் வேலையில் அமராமல் பாதிவழியில் திரும்பி எப்படி ஊருக்குப் போகிறது? ஒரு மகாராஜாவின் பட்டத்து ராணியின் தாதியாக இருப்பது என்றால் அது சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பதவியா? நாங்கள் எங்கள் தாயாரிடம் போய் வேலையில்லாமல் திரும்பிவந்து விட்டதாகச் சொன்னால், அவள் எங்களை வீட்டுக்குள் நுழைய விடுவாளா? எங்கள் மூவரையும் அவள் அடித்து வைது துரத்திவிடுவாளே! நீங்கள் சொன்ன நியாயங்களை எல்லாம் நாங்கள் எவ்விதமாக எடுத்துச் சொன்னாலும், அவள் அவைகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாளே! அப்படி அவமானமடைந்து வீட்டை விட்டு போய் நாங்கள் என்ன செய்கிறது? ஊரிலுள்ள ஜனங்கள்தான் என்ன நினைக்கமாட்டார்கள்! நாங்கள் ஏதோ அயோக்கியத் தனமான காரியம் செய்துவிட்டதனால், லலிதகுமாரி தேவி எங்களைக் கிட்டச் சேர்க்காமல் துரத்திவிட்டதாக நினைத்து ஏளனம் செய்து பழித்து விலக்குவார்களே! அதன்பிறகு நாங்கள் விமோசனம் இல்லாமல் அழிந்தல்லவா போய்விட நேரும். இதையெல்லாம் நீங்கள் நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். gy.é.HI-2