பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பூர்ணசந்திரோதயம்-3 காண, சாமளராவ் நீங்கலாக, மற்ற எல்லோரும் திடுக்கிட்டு ஸ்தம்பித்துப் போயினர். சாமளராவ் உடனே எழுந்து நின்றான். பாளையக்காரரது முகம் சடெரென்று மாறுபட்டு பயத்தினால் வெளுத்து விகாரப்பட்டுப் பிரேதக்களை அடைந்தது. தமது வார்த்தை எல்லாம் பொய் யென்று எப்படியும் ருஜ-வாகி விடுமே என்ற பீதியும், பஞ்சண்ணாராவ் முதலியோர் தமக்கு எவ்விதமான தீங்கு செய்வார்களோ என்ற திகிலும் எழுந்து பாளையக்காரரை நடுக்குவித்தன. மகா விபரீதமான அந்த நிலைமையில் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல், பாளையக்காரர் கலங்கிக் குழம்பித் திருட்டு விழி விழித்தவராக நிற்க, அப்போது பூர்ணசந்திரோதயம் மிருதுவான குரலில் இனிமையாகப் பேசத்தொடங்கி, "மகாராஜாவே! பிரபுக்களே! இதுவரையில் தாங்கள் எல்லோரும் வாதியின் கட்சியை மாத்திரம் கேட்டீர்கள். இப்போது கருணை புரிந்து பிரதி வாதியின் கட்சியைக் கேட்டருள வேண்டும்' என்று நிரம்பவும் பணிவாகக் கூறினாள். உடனே இளவரசர் எழுந்து, 'அவசியம் கேட்கத்தான் வேண்டும். சபாநாயகர் அவர்களே! இந்த அம்மாள் சம்பந்தமாக உங்களுக்கு எவ்விதமான ஏமாற்றம் உண்டாகியிருந்தாலும், அதை எல்லாம் இப்போது பாராட்டாமல், இவர்கள் சொல்வதையும் கேட்டு எது நீதியோ அதைச் செய்தே தீரவேண்டும். இந்தக் கூட்டத்தில் நீங்கள் அக்கிராசனர் ஆகையால், உங்களுடைய சொந்த உணர்ச்சிகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலைமை வகித்து இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் கடமைப்பட்டு இருக்கிறீர்கள்' என்றார். அதைக்கேட்ட ஜெமீந்தார், “அவசியம் நாம் அப்படித்தான் டந்துகொள்ளவேண்டும்! எந்த விஷயத்திலும் பிரதிவாதியின் வாக்குமூலத்தைக் கேட்டுத்தான் தீர்மானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஒருதலைச் சார்பான நம்முடைய