பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187 தீர்மானத்துக்கு என்ன யோக்கியதை இருக்கப் போகிறது. இந்த விஷயத்தில் வாதியும் பயப்பட நியாயமில்லை. அவருடைய கட்சி உண்மையானதாக இருந்தால், அது எப்படியும் வெளியாகிவிடும்; அதைப் பற்றி நமது பாளையக்காரரும் கவலைப்பட வேண்டியதில்லை. முதலில் இந்த அம்மாளுக்கு மறைவான ஓரிடத்தில் ஒர் ஆசனம் போட்டு, உட்கார வையுங்கள். சாமளராவ்! உன்னுடைய எஜமானி அம்மாள் நிற்பது சரியல்ல. உன்னுடைய ஆசனத்தை எடுத்துக் கொண்டுபோய் அந்தக் கம்பத்தின் மறைவில் போடு' என்று கூறினார். அந்தச் சமயத்தில் ஜெமீந்தார் பூர்ணசந்தி ரோதயத்தினது அற்புத அழகைக் கண்டு மதிமயங்கி உருகி உட்கார்ந்து போய்விட்டார் என்று சொல்வதே பொருத்தமாகும். தமது விஷயத்தில் அவள் செய்த கொடுமையையும் அவர் அப்போது மறந்து விட்டார். அவள் தம்மை வில் வைத்த நாற்காலியில் மாட்டி விட்டுத் தப்பித்துப் போனதையும் அவர் மறந்துவிட்டார். அவளது விஷயத்தில் பாளையக்காரர் அபாண்டமான பொய்யைக் கற்பித்துக்கொண்டு வந்து வாதிக்கிறார் என்ற உணர்ச்சியால் ஜெமீந்தாரினது மனம் இரங்கி அந்தப் பெண்ணரசியினது விஷயத்தில் தாம் எப்படிப்பட்ட உதவியா னாலும் செய்தே தீரவேண்டும் என்ற உறுதி செய்து கொண்டவராக இருந்தார். - உடனே சாமளராவ், தனது நாற்காலியை எடுத்துக்கொண்டு போய்ப் பக்கத்தில் இருந்த ஒரு கம்பத்தின் மறைவில் போட, பூர்ணசந்திரோதயம் அவ்விடத்தில்போய் மறைவாக உட்கார்ந்து கொண்டாள். - அதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பாளையக்காரர் அன்றோடு தமது மானம் போய்விட்டது என்ற நிச்சயத்தை உணர்ந்தார். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், அவரது கட்சி நிஜமான கட்சியென்று எல்லோரும் நினைக்கும்படி முறுக்காக உட்கார்ந்து கொண்டிருந்தார்.