பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - - பூர்ணசந்திரோதயம்-3 உடனே சபாநாயகர் பூர்ணசந்திரோதயம் இருந்த பக்கமாக திரும்பி, சரி; இனி பிரதிவாதி தம்முடைய கட்சியைத் தெரிவித்துக் கொள்ளலாம்” என்று அன்போடு கூறினார். - அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், 'இந்தப் பாளையக் காரர் என்மேல் சொன்ன அவதூறு எல்லாம் முற்றிலும் கட்டுப் பாடானது. அவர் சொன்ன வரலாற்றில் எள்ளளவும் நிஜமே கிடையாது. இப்படிப்பட்ட அபாண்டப் பழியை ஏற்படுத்தத் துணிந்த இந்த மனிதரோடு நேருக்குநேர் வாக்குவாதம் செய்ய எனக்கு இஷடமில்லை. நான் பேசுவதற்குப் பதிலாக என்னுடைய காரியதரிசியான சாமளராவ் என் கட்சியைப் பேசுவார். சபாநாயகர் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்’ என்று நயமாகவும் பணிவாகவும் கூறினாள். - சபாநாயகர், "சரி; அவனே பேசட்டும். அதைப் பற்றி ஆட்சேபனை ஒன்றுமில்லை' என்றார். உடனே சாமளராவ் எழுந்து, "புதன்கிழமை தினம் சாயுங் காலம் வம் புலாஞ் சோலையில் என்னுடைய எஜமானி யம்மாளுக்கும், இந்தப் பாளையக்காரருக்கும் சந்திப்பு நேர்ந்த காலத்தில் இதோ நிற்கும் பஞ்சண்ணாராவ் அவ்விடத்திலிருந்து இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். இவர் சொல்லும் வரலாற்றைச் சபாநாயகர் முதலில் கேட்க வேண்டும்' என்றான். உடனேசபாநாயகர் பஞ்சண்ணாராவினது வாக்குமூலத்தைக் கேட்க, அவன் சபாநாயகருக்கு ஒரு கும்பிடுபோட்டுக் குனிந்து பணிவாக நின்று, 'எஜமானருடைய உத்தரவுப்படி, எனக்குத் தெரிந்த சங்கதிகளையெல்லாம் நடந்தபடிசொல்லிவிடுகிறேன். இந்த அம்மாளும், நானும் என்னுடைய வேலைக்காரனான ராமனும் இதோ இருக்கும் கதவுக்குப் பக்கத்தில் கொஞ்ச காலமாக நின்று இங்கே பேசப்பட்டதையெல்லாம் கேட்டுக்