பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189 கொண்டுதான் இருந்தோம். புதன்கிழமையன்று சாயுங்காலம் நான் வம் புலாஞ் சோலைக்குப் போயிருந்தேன். என்ன காரணத்தினால் நான் அங்கே போனேன் என்பதை நான் இங்கே வெளியிட்டுச்சொல்லமுடியாது' என்று கூறி மிட்டாதாரையும், இனாம் தாரையும் கூர்ந்து பார்த்தவனாய் மேலும் பேசத் தொடங்கி, "அப்போது அவ்விடத்தில் நம்முடைய பாளைய்க் காரரும் இந்த அம்மாளும் சந்தித்துப் பேசினார்கள். ஆரம்பத்தி லிருந்து நான் ஒரு புதருக்குப் பக்கத்திலிருந்து இவர்களுடைய வாக்குவாதத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தேன். அவ்விடத்தில் ஹேமாபாயி வரவே இல்லை. அதற்கு முன்னும் பின்னும் அவள் அவ்விடத்தில் காணப்படவே இல்லை. பாளையக்காரர் ஒர் அழகான கிளியைக் கையில் வைத்துக் கொண்டு குருவிக்காரனைப் போலக் காணப்பட்டதன்றி அதைக் காட்டும் வியாஜத்தை வைத்துக் கொண்டு இந்த அம்மாளிடத்தில் பேச்சுக்கொடுக்க, இந்த அம்மாள் அந்தக் கிளியைப் பார்த்து ஆசைப் பட்டு அதை விலைக்குக் கேட்டார்கள். இவர் அதை இனாமாகக் கொடுத்து விடுவ தாகவும், ஆனால், தாம் ஒவ்வொரு நாளும் வந்து அந்தக் கிளியைப் பார்த்துவிட்டு வர உத்தரவு கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இந்த அம்மாள் அதற்கு இணங்கவில்லை. அதிலிருந்து இருவருக்கும் பலமான வாக்குவாதம் நடந்தது. இவர் அம்மாளிடத்தில் கபடமான வார்த்தைகளையே பேசினார். அம்மாள் இவரைக் கொஞ்சமும் மதிக்காமல் அலட்சியமாகவும் அருவருப்பாகவுமே பதில் சொன்னார்கள். அதன்பிறகு, இவர்தம்முடைய சிநேகிதர்கள் சிலர்சேர்ந்து இந்த அம்மாளை வெல்வதாகப் பந்தயம் வைத்திருப்பதாகவும், தாம் இன்னார் என்றும் தாம் அதில் சம்பந்தப்படவில்லை என்றும், தாம் இந்த அம்மாள் பேரில் மோகம் கொண்டிருப்பதாகவும், தமக்கு இணங்கி வந்தால், மற்றவர்கள் எவ்விதக் கெடுதலும் செய்யாமல் தாம் காப்பாற்றுவதாகவும் இவர் சொன்னார். அம்மாள் உடனே ரெளத்திராகாரமான கோபம் கொண்டு