பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 195 அதைக் கேட்ட பாளையக்காரர், அதற்குமேல் தாம் எவ்விதமான ஆட்சேபணை சொல்வது என்பதை உணராதவராய் இரண்டொரு நிமிஷம் தத்தளிக்க, அப்போது, அவருக்குப் பின்னால் வந்து நின்ற பஞ்சண்ணாராவ் முன்னால் வந்து, அமீனா ஐயா மெத்தையின்மேல் இளவரசரும் இன்னம் சில பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது நீங்கள் ஜெப்தி செய்வதோ சிறைப்படுத்துவதோ மரியாதைப் படாது. ஆகையால், இந்த ஐயாவை இரண்டொரு நிமிஷ நேரம் விடுங்கள். இவர் மேலே வந்து விஷயத்தை ஒருவிதமாக வெளிப்படுத்தினால், அவர்கள் எல்லோரும் உடனே வெளிப் பட்டுப் போய்விடுவார்கள். அதன்பிறகு உங்களுடைய சட்டப் படி நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இவர் ஒருவேளை பின்பக்கமாக ஓடிப்போய் விடுவாரோ என்ற பயம் இருக்கும் பட்சத்தில் உங்களில் யாராவது ஒருவர் மேலே வந்து இவரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்' என்றான். அதைக் கேட்ட அமீனா, இளவரசர் இருப்பதைக் கருதி, அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு, தான் மாத்திரம் மேலே வருவதாகச் சொன்னான். உடனே பஞ்சண்ணாராவ், சாமண்ணாராவ், பாளையக்காரர், அமீனா ஆகிய நால்வரும் மேலே சென்றனர். பாளையக்காரர் இருதலைக்கொள்ளி எறும்பு போலத் தவிக்கலானார். மேலே இருந்த தமது நண்பர்களிடம் போவதற்கும் அவருக்குப் பெருத்த திகிலாக இருந்தது. கீழேயே இருந்து அமீனாக்களுக்கு உத்தரம் சொல்வதும் அபாயகரமாக இருந்தது. ஆகையால், அவர்கரைகடந்த கலவரமடைந்து மெய் மறந்தவராய்ப் பைத்தியக்காரனைப்போல விழித்துக்கொண்டு. மேலே போய்ச் சேர்ந்தார். பாளையக்காரர் திடீரென்று கீழே அழைக்கப்பட்டதன்காரணம் என்ன என்பதை அறிய இளவரசர் முதலியோர் நிரம் பவும் ஆவல் கொண்டதைக் கண்ட பஞ்சண்ணாராவ் தான் கீழே இறங்கிப்போய் விஷயத்தை அறிந்து வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான். ஆகையால்,