பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பூர்ணசந்திரோதயம்-3 அவனும் மற்ற மூவரும் மேலே வந்தவுடனே எல்லாரும் பஞ்சண்ணாராவின் முகத்தைப் பார்த்தனர். உடனே பஞ்சண்ணாராவ் அங்கிருந்த எல்லோரையும் பார்த்து நிரம்பவும் பணிவாகப் பேசத் தொடங்கி, 'எஜமான்களே! நம்முடைய பாளையக்காரரை யார் கூப்பிட்டார்கள், எதற்காகக் கூப்பிட்டார்கள் என்ற சங்கதியைத் தெரிந்துகொள்ள, தாங்கள் எல்லோரும் ஆசைப்படுவதாகத் தெரிகிறது. இதோ எங்களோடு வந்திருக்கும் மனிதர்கச்சேரி அமீனா. இவரும் இன்னம் ஐந்தாறு சிப்பந்திகளும் இந்த வீட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் ஜெப்தி செய்து பாளையக்காரரைக் கைதுசெய்து அழைத்துக் கொண்டு போக வந்திருக்கிறார்கள். பாளையக்காரர் நாட்டுக்கோட்டைக் கதிரேசன்செட்டியாருக்கு முப்பதினாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆகியிருக்கிறதாம். பாளையக்காரர் பகலில் அகப்படாமல் ஒளிந்து கொண்டிருந்ததால், ராத்திரியில் வந்து பிடிக்கும்படிகச்சேரியில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்களாம். அதை நிறைவேற்றும் பொருட்டு, இவர்கள் இப்போது வந்தார்களாம். இவர்கள் தங்களுடைய அலுவலை நிறைவேற்றுமுன் எஜமானர்கள் இந்தக் கூட்டத்தைக் கலைத்துவிட்டு இவ்விடத்தை விட்டுப் போய்விடுவதே ஒழுங்கு. அதுவுமன்றி, இவ்வளவு பாடுபட்டு இப்படிப்பட்ட பெருத்த விருந்தைத் தயாரித்து இந்தக் கடுமையான பந்தயத்தில் நம்முடைய பாளையக்காரர் ஜெயம் பெற்றிருப்பதால், இவருக்குத் தக்க வெகுமதி கொடுத்து அனுப்ப வேண்டும். அந்த வெகுமதியை உங்களுடைய அனுமதியில்லாமல் நானே கொடுப்பதைப்பற்றி எஜமான்கள் என்மேல் கோபம்கொள்ளக் கூடாது' என்று கூறியவண்ணம் சடெரென்று பாளையக்காரர் மீது பாய்ந்து, அவரது முகத்தில் மாட்டுக்கொம்புகள் போல நீளமாக வளர்ந்திருந்த அடர்த்தி யான மீசையைத் தனது இடது கையால் இரும்புப் பிடிபோல இறுகப் பிடித்துக் கொண்டு, வலதுகையால் அவரது கன்னத்தில் பளிர்பளிரென்று பன்முறை அறைந்து, முஷ்டியால் ஏழெட்டு