பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பூர்ணசந்திரோதயம்-3 கலியாண:- நீ சொல்வது ஒரு விதத்தில் நியாயமாகத் தோன்றினாலும் நீங்கள் இனி லலிதகுமாரி தேவியிடம் வேலைக்கு அமருவதற்கு மாத்திரம் நான் இடங்கொடுக்க மாட்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் உன்னுடைய தாயார் மகா குரூரமான மனசுடைய மனிஷி என்பது தெரிகிறது. நீங்கள் வேலையிலமர்ந்த பிறகு, அவளுக்குக் கடிதம் எழுதி, இந்த விஷயத்தை எல்லாம் தெரிவித்து, நீங்கள் ஒழுங்காக நடந்து கொள்ளப் போவதாகவும் எழுதினால், அவள் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டாள். உடனே அவளே நேரில் புறப்பட்டுப் பூனாவுக்கு வந்து உங்களை அதட்டி விரட்டி வற் புறுத்துவாள். அவளுக்குப் பயந்துகொண்டு நீங்கள் அவளுடைய பிரியப்படி நடந்துகொள்ள வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமலிருக்க வேண்டுமானால், நீங்கள் லலித குமாரி தேவியின் பக்கத்தில் சேராமலிருப்பதே நல்லது. நீங்கள் திரும்பிப்போய் விஷயம் இப்படி இருக்கிறது என்று பக்குவமாக அவளுக்கு எடுத்துச் சொல்லுவீர்களானால், முதலில் ஒருவேளை அவள் ஆத்திரப்பட்டு உங்களைக் கண்டித்தாலும், இரண்டொரு நாளில் அவளுடைய மனம் நல்ல நிலைமைக்கு வந்துவிடும் என்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. அம்மாளு:- (எவ்வித மறுமொழியும் சொல்ல மாட்டா தவளாய்த் தத்தளித்து ஆத்திரமடைந்து) என்ன ஐயா இது? உங் கள் விஷயத்தில் எவ்விதத் தீங்கும் நினைக்காதவர்களான எங்களிடத்தில் நீங்கள் இவ்வளவு கொடுமை பாராட் டி எங்களை ஒரு பொருட்டாக எண்ணி எங்களோடு எதிர்த்து யுத்தம் செய்ய முன்வருவது அடுக்குமா? கலியாண:- அம்மாளு! நீ சொல்லும் நியாயம் அந்த லலித குமாரிதேவிக்கும் உண்டல்லவா! உங்கள் விஷயத்தில் அந்தப் பெண்ணரசி கனவில் கூடத் தீங்கு நினைத்திருக்க மாட்டாளே! அந்த அம்மாளின்மேல் நீங்கள் அக்கிரமப் போர் தொடுக்க