பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பூர்ணசந்திரோதயம்-3 உடனே சபாநாயகரான ஜெமீந்தார் மற்ற எல்லோரையும் பார்த்து, "சரி; இனிமேலும் நாம் இங்கே இருந்து சம்பாஷித்துக் கொண்டிருப்பது சரியல்ல. அதுவுமன்றி, நம்மைப் போன்றவர்கள் எந்த விஷயத்தையும் கிரமப்படி விசாரித்து நீதி செலுத்தக் கொஞ்சமும் திறமையற்றவர்கள்; குற்றவாளிக்குத் தக்கபடி சுருக்கமான வழியில் தண்டனை செய் வித்து சரியானபடி நற்புத்தி புகட்டுவதில் நம்முடைய பஞ்சண்ணா ராவைப் போன்ற பாமர ஜனங்களே நல்ல திறமை வாய்ந்தவர்கள். நாம் ஆடம்பரமாக நாற்காலி மேஜைகளைப் போட்டுக்கொண்டு கம்பீரமாக இருந்து வெகுவெகு நீளம் விசாரணையை நடத்தி ஏதோ ஒரு முடிவைக் காகிதத்தில் எழுதிவிடுகிறோம். நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது வழக்குகளில் அந்த முடிவு நிறைவேற முடியாமலே குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டு போய்விடுவார்கள். உதாரணமாக நாம் இப்போது செய்த விசாரணையில் பாளையக்காரர் செய்தது சுத்தத் தவறு என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் அதை வெளியில் சொல்லமாட்டாமல் இதை எப்படித் தீர்மானிக்கிறது என்று யோசனை செய்து தவித்துக் கொண்டிருந்தோம். நம்முடைய பஞ்சண்ணாராவோ, பாளையக்காரர் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அவருக்கு வெகுமதி இல்லாமல் செய்ததோடு அவர் செய்த அக்கிரமக் காரியத்துக்குத்தக்கபடி கடுமையான தண்டனையும் கொடுத்து, அவர் இனி எப்போதுமே திருந்தும்படி செய்து விட்டான். படித்த மனிதர்களைக் காட்டிலும் படிக்காத பாமர ஜனங்களிடத்திலே தான், நியாயம் இன்னது அநியாயம் இன்னது என்பதைச் சூட்சுமமாகத் தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளும் பகுத்தறிவும் அனுபவ ஞானமும் அதிகமாக இருக்கின்றன. வெள்ளிக்கிழமைராத்திரி ஒன்பதுமணிக்கு மேல் பதினோரு மணிக்குள் இந்த அம்மாள் சில முக்கியமான காரணங்களைப் பற்றி என்னுடைய மாளிகைக்கும் இளவரச ருடைய அரண்மனைக்கும் வந்திருந்து விட்டுப் போயிருக்கி