பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O3 படுக்கையில் படுத்துக் கொள். இன்னம் கொஞ்சம் தண்ணிர் குடித்துவிட்டுக் கால்நாழிகை நேரம் படுத்துக் களைப்பாறு. அதற்குள் நான் கடப்பாறையை எடுத்து இந்தத் துளையை இன்னம் கொஞ்சம் பெரியதாகச் செய்கிறேன். அதற்குமேல் நீ அப்பால் போவது சுலபமாக இருக்கும். இப்போது பாராக்காரன் இழே போயிருப்பான். இந்த ஆபத்துச் சமயத்தில் நாம் சட்டத்தைப் பொருட்படுத்தக் கூடாது. இருளில் இருப்பது உனக்கு பயமாக இருப்பதால், நான் விளக்கைக் கொளுத்தி, அதன் பிரகாசம் வெளியில் தெரியாமல் மறைத்து வைக்கிறேன். நீ என்னைவிட்டு மெதுவாக இந்தப் படுக்கையில் படுத்துக் கொள் என்று நயமாகவும் உருக்க மாகவும் கூறி அவளது பிடியிலிருந்து மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்தான். அதைக்கேட்ட அந்த மடந்தை, "ஒகோ! நான் என்னுடைய முகமூடியை எடுத்து விட்டேன் ஆகையால், விளக்கைக் கொளுத்தி, என்னுடைய முகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசைபோலிருக்கிறது? உங்களுடைய ஆசை எப்படிப்பட்டதாக இருந்தாலும், இனி நான் அதைப் பூர்த்தி செய்யாமலிருக்க முடியுமா? ஒருநாளும் முடியாது. இந்த முகத்தை நான் இனி எந்தப் புருஷருக்கும் காட்டக்கூடாது என்று உறுதி செய்து கொண்டேன். ஆனாலும் நான் உங்களுக்கு எப்படியும் இதைக் காட்டத்தான் போகிறேன். இன்னம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விளக்கை இப்போது கொளுத்தினால், அதன் பிரகாசம் பளிச்சென்று வீசி, என் மயக்கத்தை அதிகப்படுத்தும்; என்ன காரணத்தினாலேயோ என் மனசில் தாங்கமுடியாத ஒரு பெருத்த கிலி உண்டாகி, என்னை நடுக் குவிக்கிறது. ஆகையால், நீங்கள் என்னை விடாமல் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்றாள். அவளது சொற்களைக் கேட்ட கலியாணசுந்தரம் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த குழப்பமும், கலவரமும் அடைந்தான்.