பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.04 பூர்ணசந்திரோதயம்-3 அதுவரையில் விளையாட்டாகப் பேசாத அந்தப் பெண் அப்படிப்பட்ட துன்பகரமான நிலைமையில் தனது முகத்தைப் பற்றிச்சொன்ன சொல், முற்றிலும் விந்தையாகத் தோன்றியது. அவள் தனது மனதில் ஏதோ கபடமான ஆழ்ந்த கருத்தை மறைத்து வைத்துக்கொண்டு அவ்வாறு பேசுகிறாள் என்று ஒருவாறு சந்தேகித்த நமது யெளவன வீரன் அவளை நோக்கி, 'பெண்ணே இந்திராபாயீ நீ இவ்வளவு நேரம் என்னோடு பழகியதிலிருந்து என்னுடைய மன உறுதியும் நிர்ணயமும் எப்படிப்பட்டவை என்று நீயே உணர்ந்து கொண்டிருப்பாய். அப்படி இருந்தும் நான் விளக்கைக் கொளுத்த எண்ணுவது உன் முகத்தைப் பார்க்கவேண்டும் என்ற கருத்தோடு என்று நீ சொல்வது என் மனசை நிரம் பவும் புண்படுத்துகிறது. யெளவனப் பிராயத்துப் பெண்ணான நீ இப்படி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதே என்னால் சகிக்க முடிய வில்லை. உன்னை எப்படி விலக்கி தூரத்தில் நகரச் செய்கிறது என்பதை அறியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்க, நான் உன் முகத்தைப் பார்க்க ஆசைப்படு வதாக நீ சொல்லுகிறாய். அப்படிப்பட்ட துராசைக்கு நான் ஒரு நொடியும் இடம் கொடுக்கக் கூடியவனல்ல. என் விஷயத்தில் உன் மனதில் அப்படிப்பட்ட சந்தேகமே வேண்டிய தில்லை. நீ தயை செய்து என்னைவிட்டு இந்தப் படுக்கையில் உட்கார்ந்து கொள்; அல்லது, படுத்துக்கொள். உடனே என் மனம் மிகவும் நிம்மதியடையும் ' என்று நயமாகக் கூறி அவளை மெதுவாக அப்பால் நகர்த்த எத்தனித்தான். ஆனால், அந்த அழகிய அணங்கு அப்பால் நகராமல், அட்டை ஒட்டிக் கொள்வதுபோல அவனை முன்னிலும் அதிக வலுவாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, 'நீங்கள் சொல்வது ஆச்சரியத்திலும் பரம ஆச்சரியமாக இருக்கிறதே யெளவனமும், கட்டழகும், முற்றிலும் நிறைந்த ஒரு பெண் நடு இரவில் ஒரு யெளவனப் புருஷர் தனியாக