வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2.13 புத்தத்துக்கு ஆரம்பிக்கிறீர்களா அப்படியே ஆகட்டும். இதனால் உயிர் போனாலும் போய்விடட்டும். நான் شال سس (ناه ألقي rهrه , ;களை விடப் போகிறதே இல்லை. நீங்கள் உங்களால் ஆனதைச் செய்து கொள்ளலாம். குத்துங்கள். கொல்லுங்கள். அல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளுகிறேன். என்னை துடித்து இம்சிக்க மாத்திரம் நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள். என் மனம் சந்தோஷப்படும்படியான ஒரு காரியத்தை மாத்திரம் நீங்கள் செய்ய மாட்டீர்கள். இது சரியான நியாயந்தானா? எத்தனையோ புண்ணிய ஆத்துமாக்கள் ஜீவகாருண்யத்தினால், உலகத்தில், தங்களாலான உபகாரத்தைச் செய்து பிறரைச் சந்தோஷப்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் ஒரு கொசுவுக்குத் துன்பம் செய்யவும் சகித்திறார்கள். அதுதான் மனிதராகப் பிறந்தவர் அடையக்கூடிய பலன். நீங்கள் அதற்கு நேர் எதிரிடையான காரியத்தைச் செய்ய எத்தனிக்கிறீர்கள். அன்னிய ஸ்திரீயைத் தொட்டு அடிப்பதற்கு ஏற்பட்ட உரிமை அவளுக்கு உபயோகப்பட மாத்திரம் இல்லாமல் போய்விட்டதா? இருக்கட்டும்; அப்படியே செய்யலாம். நான் உங்களை விடுகிறதும் இல்லை; பொழுது விடிகிற வரையில் நான் இவ்விடத்தைவிட்டு போகப் போகிறதும் இல்லை. பொழுது விடிந்தவுடன் பாராக்காரன்வந்து பார்க்கட்டும். அதனால் வரும் கஷ்டங்களை எல்லாம் அனுபவியுங்கள்' என்றாள். கலியாணசுந்தரம், 'முட்டாளே போ. இதுவரையில் நான் உன்னை நல்ல புத்திசாலியென்றும், மேலான குணம் உடையவள் என்றும் அல்லவா நினைத்தேன். சே உன்னுடைய யோக்கியதை இவ்வளவுதானா! உன்னைத் தொட்டு அடிப்ப தாகவும் வேறுவிதமாக உன்னை வருத்துவதாகவும் நான் சொல்லவும் இல்லை. அப்படிச் செய்ய நான் எண்ணவும் இல்லை. நீ உன்னுடைய வரம்பை மீறித் தகாத காரியத்தில் பிரவேசிக்க எத்தனிக்கிறாய். ஆகையால், அதற்கு நான் இடங்கொடுக்காமல் தடுத்தே தீருவேன். அதற்கு எவ்வளவு
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/215
தோற்றம்