பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பூர்ணசந்திரோதயம்-3 எண்ணுகிறபடியால், ஒரு குற்றத்தை மனசால் நினைப்பது கூடத் தவறு என நாங்கள் உறுதியாக எண்ணி அதற்கொத்தபடி எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் நடந்துகொள்ளுகிறோம். ஆகையால், நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. நாளைய தினம் பாராக்காரன் வந்து விசாரணை செய்யும்போது, நீ எப்படிப்பட்ட பொய்யை வேண்டுமானாலும் சொல்லலாம். அதனால், எனக்கு எவ்விதமான துன்பமும் மாணஹானியும் நேருவதானாலும் நேரட்டும். அதைப்பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால், பொழுது விடிகிறவரையில் என்னை நீ பிடித்துக்கொண்டிருக்கவோ, அல்லது, வேறு வகையில் என்னை வற்புறுத்தவோ, நான் உன்னை விடப் போகிறதில்லை. அதை மாத்திரம் நீ உறுதியாக மனசில் வைத்துக்கொள். நீ இப்போது என்னை விட்டு அப்பால் நகரப் போகிறாயா இல்லையா? என்ன சொல்லுகிறாய்? நீ எவ்வளவு அற்புதமான அழகும் வசீகரமான யெளவனப் பருவமும் உடையவளாக இருந்தும், சுவர்க்கலோகத்தை அடைந்தவன் அனுபவிக்கக்கூடிய சகலமான சுகங்களையும் அபரிமிதமாக நீ உன்னிடத்தில் நிறைத்து வைத்துக்கொண்டு இன்பக் களஞ்சிய மாக இருந்தும், உன்னிடம் ஸ்திரீகளுக்கு அவசியம் தேவையான நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் இயற்கை ஆபரணங்கள் இல்லாமலிருப்பதால், நீ கேவலம் உயிரற்ற பினம்போல எனக்குக் காணப்படுகிறாய். நீ என்னை அனைத்துக் கொண்டிருப்பது, ஆலகால விஷத்தைக் கொண்ட பரமவிகாரமான பாம்பு என் உடம்பில் சுற்றிக்கொண்டிருப்பது போல மகா அருவருப்பாகவும், அசங்கியமாகவும், சகிக்க முடியாததுன்பமாகவும் இருக்கிறதே அன்றி வேறல்ல. கேவலம் பேய், பிசாசு, டாகினி, மோகினி, அரக்கி என்று சொல்லப்பட்ட பயங்கரமான ஜெந்துக்களுக்கும் உனக்கும் கொஞ்சமும் பேதமில்லை என்றே நான் எண்ணுகிறேன். அப்படியிருக்க, நான் உன்மேல் காதல் கொண்டு உன்னுடைய சொற்படி நடந்து, உன்னால் நான் சுகப்பட நினைப்பேன் என்று நீ எதிர்பார்ப்பது