பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பூர்ணசந்திரோதயம்-3 வேறே எந்தச் சத்திரத்திலாவது ஜாகை செய்து கொண்டி ருக்கிறேன் - என்றான். அதைக்கேட்ட அம்மாளு நிரம்பவும் கிலேசமடைந்து, "வேண்டாம்; வேண்டாம். நீங்கள் எங்களை விட்டு வேறே இடத்துக்குப் போனால், அது பார்க்கிறவர்கள் சந்தேகப்பட இடம் கொடுக்கும் . இங்கே இருக்கிறவர்கள் அதைப் பற்றி ஏதாவது வம்பு வளர்ப் பார்கள் ஆகையால், நீங்கள் எப்போதும் போல எங்களோடு கூடவே இருங்கள். நாங்கள் யோசித்து முடிவு சொல்வதற்கு நீங்கள் இங்கே இருப்பதனால், எவ்வித இடையூறும் உண்டாகாது” என்றாள். உடனே கலியாணசுந்தரம் உண்மையான அன்போடும் இரக்கத்தோடும் பேசத் தொடங்கி, 'அம்மாளு அந்த விஷயத்தில் உன்னுடைய பிரியப்படியே நான் நடந்து கொள்ளத் தடையில்லை. ஜனங்கள் உங்களைப்பற்றி வம்பு வளர்க்க, நான் இடங்கொடுக்க இஷடப்படவில்லை. சங்கதி இவ்வளவு தூரத்துக்கு வந்த பின்னும், நீங்கள் என்மேல் பகைமை பாராட்டாமல், முன்போல என்னை உங்களுடைய சகாப் பிரயாணியாகவே பாவித்துவர, நீங்கள் பிரியப்படுவீர்கள். ஆனால், அதை நான் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டு உங்க ளோடு கூடவே இருந்துவரத் தடையில்லை. அது மாத்திரமல்ல; நீங்கள் பெருத்த ஸ்தானங்களில் உத்தியோகத்தில் அமர்வதற்கு நான் இடைஞ்சலாக நிற்கும் விரோதி என்று நீங்கள் நினைக்காமல், நான் சொன்ன நியாயத்தை ஒப்புக்கொள்ளு கிறீர்கள் என்ற நல்லஅபிப்பிராயமும், உங்கள் விஷயத்தில் என் மனசில் உண்டாகும்; நீ இங்கே வந்து அதிகநேரம் ஆகிறது. மற்றவர்கள் இல்லாத காலத்தில் நாம் இவ்வளவு நேரம் இங்கே தனியாக இருப்பதை யாராவது கவனித்தால், நம்மைப்பற்றி ஏதாவது தவறான அபிப்பிராயம் கொள்வார்கள். ஆகையால், நாம் இந்த சம்பாஷணையை இவ்வளவோடு நிறுத்திக் கொள்வோம். இனி நான் வழக்கம் போல உன் னையாவது, உன் தங்கைகளையாவது உன் சின்னம் மாளை