பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பூர்ணசந்திரோதயம்-3 அங்கு நடக்கும் சச்சரவைக் கேட்டுப் பாராக்காரன் வந்து விஷயங்களையெல்லாம் கண்டுகொண்டால், அநியாயமாக அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் பெருத்த பொல்லாங்கு நேர்ந்துவிடப் போகிறதே என்ற எண்ணத்தினால் அவன் அதுகாறும் அளவற்ற பொறுமையை வகித்து அவளிடம் கூடிமையோடு நடந்துவந்தான். ஆனால், அவள் தனது வரம்பைக் கடந்து சகிக்கமுடியாத செய்கையில் இறங்கிய பிறகுதான் தாட்சணியம் பார்ப்பது ஒழுங்கல்ல என்று தீர்மானித்துக் கொண்டவனாய், அவளைப் பிடித்து விசையாக அப்பால் தள்ளிவிட, அவள் சடேரென்று விசிப் பலகையில் போய் விழுந்தாள். ஆனாலும், மறுபடியும் எழுந்து முன்னிலும் நூறு மடங்கு அதிகரித்த வீராவேசத்தோடும், ஆவலோடும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து அவனை மறுபடியும் பிடித்துக் கொண்டு, சரி; என்னை நீங்கள் தள்ளிவிட்டுக் கொண்டே இருங்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளத்தான் போகிறேன். நீங்கள் தள்ளிவிடுவதால் என்னுடைய மண்டை உடைந்து சுக்கல் சுக்கலாகப் போனாலும் போகட்டும். அப்போதும் நான் உங்களை விடப் போகிற தில்லை' என்று கூறியவண்ணம் தனது இரண்டு கைகளையும் அவனது கழுத்தைச் சுற்றிலும் கொடுத்து சங்கிலிப் பிணையல் போல் அவனைப் பிடித்துக்கொண்டாள். அப்போது கலியாணசுந்தரத்தின் மனதில் பொங்கியெழுந்த ஆத்திரத்தையும், வீராவேசத்தையும் அவனது உடம்பு பதறியதையும் வாசகர்கள் யூகித்துக் கொள்வதே எளிதன்றி, விவரித்துச் சொல்வது மகா கடினமான காரியம். அப்போது அவன் அவளது விஷயத்தில் அபாரமான விசனமும் இரக்கமும் கொண்டவனாய் மறுபடியும் அவளைப்பார்த்து நயமாகப் பேசத் தொடங்கி, 'இந்திராபாயீ! இது உனக்குக் கொஞ்சமும் அடுக்காது. உன்னைக் கொடுமையாக நடத்த என் மனம் இன்னமும் துணியவில்லை. நீ இப்போது விசிப்பலகையில்