பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219 போய் விழுந்ததில், உனக்குப் பலமான அடிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வளவுதூரம் உன் விஷயத்தில் கடுமை காட்ட நேர்ந்ததைப் பற்றி என் மனம் தவிக்கிறது. வீணாக என்னை உபத்திரவித்து என் மனதைப் புண்படுத்தி, நான் இன்ன மும் அதிக மூர்க்கமான காரியத்தைச் செய்ய இடம் கொடுக்காதே. பேசாமல் என்னைவிட்டு விலகி நில்' என்று அன்பாக வற்புறுத்திப் பேசினான். அதைக் கேட்டு, அந்தப் பெண் மெய் மறந்து ஆவேசம் கொண்டவள்போல, "நீங்கள் என்னை விசிப்பலகையில் மோதினாலும் சரி, சுவரில் மோதினாலும் சரி, என்னைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கீழே அடித்தாலும் சரி, அப்போதும் எனக்கு உங்கள்மேல் கோபமாவது, வெறுப்பாவது, பிரியக் குறைவாவது உண்டாகப் போகிற தில்லை. என் உயிர் போகிற வரையில் நீங்கள் என்னை மோதிக் கொண்டே இருங்கள். நான் உங்களை விடாமல் பிடித்துக் கட்டிக்கொண்டு நீங்கள் மோதும் ஒவ்வொரு மோதுக்கும் நூறு நூறு முத்தங் கொடுக்கிறேன்' என்று கூறியவண்ணம், அவனது முகத்தோடு தனது முகத்தைச் சேர்த்து வைத்துத் தான் சொன்னதுபோலச் செய்கையில் நடத்திக் காட்டத் தொடங்கினாள். அந்த நிலைமை கலியாணசுந்தரம் சகித்துக் கொள்ளக்கூடிய வரம்பை முற்றிலும் மீறியதாக இருந்தமையால், அவன் ஒரு நிமிஷ நேரம் தன்னை மறந்து, அவளை உதறி மறுபடியும் தள்ளிவிட அந்த முறை அவள் வேரற்ற மரம்போலத் தரையில் படேரென்று மல்லாந்து விழுந்தாள். அவளது முதுகு தலையின் பின்பாகம் முதலிய இடங்களில் பலமான அடிபட்டதன்றி தலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. அப்போதும், அவள் பின் வாங்காமல், அம்பு பாய்வதுபோலச் சடேரென்று எழுந்தோடி, “சரி; இதுபோதாது. இன்னம் பத்துத் தடவை தள்ளிவிடுங்கள். இப்போது ரத்தம் மாத்திரம் ஒழுகுகிறது. என் உடம்பிலுள்ள