பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221 வில்லை. மெதுவாக அவளது பிடியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றால், அவள் தன்னைப் பிடித்திருந்தது இரும்புப்பிடிபோல உறுதியாக இருந்தது. வலுவாகப் பிடித்துத் தள்ள எத்தனித்தால், அவள் விசிப்பலகையிலும் தரையிலும் போய் அபாயகரமாக விழுந்து அடி பெறுகிறாள். ஆகவே, அவளை எப்படி விலக்குகிறது என்ற கவலையும், அந்தத் தர்மசங்கடத்தை எப்படி நிவர்த்தி செய்துகொள்ளுகிறது என்ற சஞ்சலமும் எழுந்து அவனது மனதை அபாரமாகக் கலக்கின. அந்த அறையை விட்டு வெளியில் போகமுடியாதபடி கதவு வெளியில் பூட்டப்பெற்றிருந்தது. தான் கூக்குரல் செய்து பாராக்காரனை அழைத்தால் தங்கள் இருவருக்குமே ஏதேனும் பெருத்த துன்பமும் முன்னிலும் பன்மடங்கு அதிகரிக்க, கஷ்டமான நிலைமையும் வந்து சம்பவிக்குமோ என்ற அச்சம் தோன்றியது. ஆகவே, அவன் அந்த மகா அபாயகரமான நிலைமையில் தான் என்ன செய்வது என்பதை அறியாமல் கலங்கிக் குழம்பி திக்பிரமை கொண்டு கோபம், இரக்கம், பரிதாபம், பயம் முதலிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல உணர்ச்சிகளால் வதைக்கப்பட்டவனாக நின்றான். அவளைத் தான் மேன்மேலும் பிடித்துத் தள்ளிவிட்டால், அவள் தாறுமாறாகக் கீழே விழுவதால் அவளது உயிருக்கு ஹானி நேர்ந்துவிடுமோ என்ற திகிலும் எழுந்து வதைக்கத் தொடங்கியது. அப்படிப்பட்ட மரணம் சம்பவித்துவிட்டால், தனது மனம்படும் வேதனையும் பாடுகளும் ஒருபுறம் இருக்க, போலீஸ் கமிஷனர் முதலியோர் அதன் பொருட்டு தன்னை மரண தண்டனை முதலிய கொடுமைகளுக்கு ஆளாக்கிவிடு வார்கள் என்ற நினைவும் தோன்றி எச்சரித்தன. தான் எவ்வளவு தூரம் வருத்தி வதைத்தாலும், அவள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த பிரியத்தோடு தன்னைக் கட்டிக்கொள்வதையும், அவள் தனது உயிரையும் கேவலம் திரணமாக மதித்திருப்பதையும் காண,