பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பூர்ணசந்திரோதயம்-3 அவன் அவளது விஷயத்தில் ஒருவிதமான பரிதாபமும் மனநெகிழ்வும் கொண்டவனாய் நெருப்பின் மீது இருப்பவன் போலத் தவிக்க, அந்தச் சமயத்தில் அவளது தலையின் பின்புறத்திலிருந்து கீழே வழிந்தோடிவந்த இரத்தம், அவனது கைகளில் பட்டது. படவே, அவனது மனம் பதற, உடம்பு கிடுகிடென்று ஆடிப்போய்விட்டது. கேவலம் அபலையான ஒரு பெண்ணைத் தான் கொஞ்சமும் இரக்கமின்றிக் கீழே தள்ளிவிட்டு, தலைஉடையும்படி செய்து விட்டதைக் குறித்து ஆராத் துயரமடைந்து குன்றிப்போய் அவளை நோக்கி உருக்கமாகவும் பட்சமாகவும் பேசத்தொடங்கி, 'பெண்ணே இந்திராபாயீ நான் சொல்வதைக் கொஞ்சமும் காதில் வாங்காமல் நீ இவ்வளவு தூரம் பிடிவாதம் செய்வது சரியானதல்ல. உன்னுடைய தலையில் பலமாக அடிபட்டி ருப்பதையும், இரத்தம் ஒழுகுவதையும் கூட நீ கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல், இப்படி மேன் மேலும் வந்து என்னைப் பிடித்துக் கட்டிக்கொண்டு வதைப்பது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது! இப்போதாவது நான் சொல்வதைக் கேள்; நீ என்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய சங்கதிகளை யெல்லாம் கொஞ்சநேரம் பொறுத்துச்சொல்லிக் கொள்ளலாம். இப்போது பேசாமல் இந்தப் பலகையின் மேல் உட்கார்ந்து கொள். நான் விளக்கைக் கொளுத்தி, உன்னுடைய தலையில் பட்டிருக்கும் காயம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று பார்த்து இரத்தம் வராமல் தடுக்க வழி செய்கிறேன். அதோ ஒரு மூலையில் அடுப்புக்கரி கொஞ்சம் கிடக்கிறது. அதை எடுத்துப் பொடி செய்து அந்தப் பொடியை வைத்து அழுத்தினால், இரத்தம் வருவது நின்றுபோகும். நீ என்னோடு போராடியது போதும். முதலில் அந்த முக்கியமான காரியத்தைக் கவனிப்போம்” என்று நயமாகக் கூறினான். அவன் அவ்வாறு மாறுபட்டுத் தனது மூர்க்கத்தை அடக்கிக்கொண்டு. சாந்தமாகவும் நயமாகவும் பேசியதைக் கண்ட அந்த மடந்தை தனது பிடிவாதத்தை நிறைவேற்றிக்