பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 225 பிறந்திருக்கிறீர்கள். நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழா விட்டால், எனக்கும் இந்த உலக வாழ்க்கை அற்றுப்போம். உங்களுக்கும் அப்படியே முடியும். நீங்கள் மாத்திரம் என்னுடைய இஷ டப்படி இணங்கி வராவிட்டால், நான் உங்களை இலேசில் விடப்போகிறவளல்ல. நீங்கள் வேறே எந்தப் பெண்ணோடு வாழ்வதையும் கண்டு நான் ஒரு நொடி நேரம் சகிப்பேனா? ஒருநாளும் அது முடியாது. அந்தப் பெண்ணையும் கொன்று, உங்களையும் கொன்று போட்டு விட்டு நானும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு உங்களுடைய காலடியிலேயே விழுந்து இறந்து போய் விடுவேன் என்பது மாத்திரம் உங்களுடைய மனசில் உறுதியாக இருக்கட்டும். நான் உங்களை வசப்படுத்துகிறதற்காக இப்படிப்பட்ட வெறும் வார்த்தைகளைப் பேசுகிறேன் என்று நினைக்கவேண்டாம். என்னுடைய மன உறுதியை வேண்டுமானால் நீங்கள் இப்போதே பரீட்சித்துப் பார்க்கலாம். இங்கே ஏதாவது கத்தி இருந்தால் எடுத்து மாதிரிக்காக என்னுடைய ஒரு கையை வேண்டுமானால் வெட்டி விடுங்கள். நான் கண்ணால் ஒரு துளி கண்ணிர் விட்டு அழுகிறேனா என்று பாருங்கள். உங்கள் பொருட்டு நான் எப்படிப்பட்ட மன உறுதியானகாரியத்தையும், வேறு எவராலும் சாத்தியமில்லாத எந்தக்காரியத்தையும் உடனே செய்வேன். போதுமா? இன்னமும் உங்களுடைய மனம் திருப்தியடைய வில்லையா? வாருங்கள்; போய்ப் பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டு சந்தோஷமாக இருப்போம், அதில் உங்களுக்கு எவ்வித நஷ்டமாவது, கஷ்டமாவது, துன்பமாவது உண்டாகப் போகிறதில்லை. இனி எதைப்பற்றியும் நீங்கள் யோசிக்கவே வேண்டாம். பேசாமல் நடந்து வாருங்கள்' என்று கிளி கொஞ்சுவதுபோல் மழலை மொழியாகப் பேசியவளாய், முன்னிலும் அதிக பலமாகவும், மோக ஆவேசத்தோடும் அவனைக் கட்டியனைத்தவளாய் விசிப்பலகை இருந்த இடத்தை நோக்கி, அவனை இழுக்கத் தொடங்கினாள். அவளது சொற்களைக் கேட்டு முற்றிலும் கலகலத்து வேர்த்து