பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227 மாட்டாய். ஆகையால், என்னுடைய வரலாறு, பூர்வோத்தரம் முதலியவற்றை அறிந்து கொள்ளாமலும், என்னுடைய மனப்போக்கைத் தெரிந்துகொள்ளாமலும் நீ மாத்திரம் உன் மனசில் ஒருவிதமான உறுதியைச்செய்துகொண்டு அதை ஒப்புக் கொள்ளப் பிரியப்படாத என்னிடத்தில் வந்து அடம்பிடித்து வற்புறுத்தி ஸ்திரீ ஜாதிகளுக்குத் தகாத வார்த்தைகளைச் சொல்லி, அடாத காரியங்களைச் செய்வது கொஞ்சமும் ஒழுங்காகுமா? காதல் என்பது, ஒரு மரத்தில் பழம் தானாகக் கணிவது போல ஸ்திரீ புருஷர்கள் பரஸ்பரம் இயற்கையாய்ப் பிரியங்கொண்டு ஒத்து ஒன்றுபட வேண்டுமேயன்றி இப்படித் தடியெடுத்து அடித்து உண்டாக்கிக்கொள்ளக் கூடியதல்ல. காமதுரர்களான சில துஷ்ட ஆண்பிள்ளைகள்தான் இப்படி பலாத்காரத்தில் இறங்கி, அபலைகளான ஸ்திரீகளிடத்தில் முரட்டுத் தனத்தை உபயோகப் படுத்திக் கற்பழிக்க எத்தனிப்பார்கள். ஒரு பெண்பிள்ளை, அதிலும் யெளவனப் பருவத்திலுள்ள நீ இப்படி நடந்துகொள்வது இந்த உலகத்தில் இதுவரையில் யாரும் கேள்வியுற்றிராத சம்பவமாக இருக்கிறது. யெளவனப் பருவம் இருக்கிறது, நற்குணங்களும் பல இருக்கின்றன. ஒரே புருஷனிடத்தில் கடைசிவரையில் உறுதியாக இருந்து அவன் விஷயத்தில் உயிரையுங் கொடுக்க வேண்டுமென்ற அருமையான கற்பும் இருக்கிறது. ஆனால், மனோவிகாரத்தை வெளியில் காட்டாமல் அடக்கிக்கொள்ளும் ஒரு குணம் மாத்திரம் இல்லாமல் போனதாகையால், உன்னிடத்திலுள்ள சகல சிறப்புகளும் மேம்பாடுகளும், குடத்தில் மறைத்து வைத்த விளக்குபோல, உபயோக மற்றவையாகவும் அருவருக்கத்தக்கவையாகவும் ஆகிவிட்டன. பார்த்தாயா? போதும்; இனிமேலாகிலும் நான் சொல்வதைக் கேள். நான் ஒரே முடிவாகச் சொல்லுகிறேன். உன்னுடைய பிரியப்படி நடக்கவும் உன்னைத் திருப்தி செய்யவும் நான் ஒரு நாளும் இணங்க முடியாது. என் உயிர்போவதானாலும் நான்என் உறுதியை மீறி நடக்க மாட்டேன். நீ கொஞ்சமும் நாணமாவது