பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பூர்ணசந்திரோதயம்-3 இருவரோடும் கூடவந்த தங்கையான அபிராமியாக இருக்கக் கண்ட நமது கலியாணசுந்தரம் அப்படியே ஸ்தம்பித்துப்போய், 'ஆ அபிராமீ. இந்திராபாயீ என்ற பொய்ப் பெயர் வைத்துக்கொண்டு வந்து நீ இவ்வளவு நாழிகை நேரம் என்னை ஏமாற்றி வதைத்துவிட்டாய் உன்னுடைய பிடிவாதம் எல்லாம் என்னிடம் செல்லும் என்றா நினைத்தாய் நானா ஏமாறுகிறவன்!” என்று கூறியவண்ணம், அவளது வாயைத் திறந்து தண்ணீரை ஊற்ற முயன்றான். அந்தச்சமயத்தில் அந்த அறையின் கதவு தடாரென்று திறந்து கொண்டது. கலியாணசுந்தரம் திடுக்கிட்டுக் கிலிகொண்டு திரும் பிப் பார்க்க, முதலில் பாராக்காரனும், அவனுக்குப் பின்னால், போலீஸ் கமிஷனரும் அவரைத் தொடர்ந்து கலியாணசுந்தரத்தின் ஆரூயிர்க் காதலியான ஷண்முகவடிவும் வந்ததைக் கண்ட நமது யெளவனப் புருஷன் பிரமித்து ஸ்தம்பித்து, அது கனவோ நனவோ என்று சந்தேகித்திருக்க, அப்போது பாராக்காரன் கமிஷனரை நோக்கி, அதோ பார்த்தீர்களா சுவரில் தொளை செய்யப்பட்டிருக்கிறது. நானும் இவ்விடத்தில் அரை நாழிகை நேரமாக இருந்து இங்கே நடந்ததையெல்லாம் கவனித்துக்கொண்டே இருந்து கடைசியில் உங்களிடம் வந்து தெரிவித்தேன். இந்த மனிதன் அநியாயமாக இந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான். இவனை நாம் அடுத்த அறையில் அடைத்து வைத்திருந்தோம். எப்படியோ தந்திரம் செய்து இந்தச் சுவரைக் குடைந்துகொண்டு இந்த அறைக்கு வந்து, இங்கே அடைபட்டிருந்த இந்தப்பெண்ணை பலாத்காரம் செய்து, கற்பழித்து அநியாயமாகக் கொன்றுவிட்டான். இப்போது கடைசியாக இவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டீர்களல்லவா? இந்தப் பெண் இவனுடைய பிரியத்துக்கு இணங்கிவராமல் பிடிவாதம் பிடித்ததாகவும் இவன் ஏமாறிப் போகாமல், இவளைக் கற்பழித்தாகவும் சொன்னதைக் கேட்டீர்களல்லவா?" என்றான்.