பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பூர்ணசந்திரோதயம்-3 அம்மாளு, தனம், அபிராமி, கலியாணசுந்தரம் முதலியோர் செஞ்சிக்கோட்டையிலிருந்து ஒரே வண்டியில் உட்கார்ந்து நெடுந்துாரம் பிரயாணம் செய்து கடைசியில் கோலாப்பூரை அடைந்த இரவில் நமது யெளவன வீரன் ஷண்முகவடிவிற்குக் கடிதம் எழுதியனுப்பி வைத்தான் என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அந்தக் கடிதத்தில் அவன் தனது மட்டற்ற வாஞ்சையையும், மனங்கொள்ளாக் காதலையும் தத்ரூபம் விவரித்து எழுதியதன்றி, தான் அந்தப் பெண்களைக் கண்டது முதல் கோலாப்பூருக்குப் போய்ச் சேர்ந்தது வரையிலுள்ள சகலமான வரலாறுகளையும் எழுதியனுப்பி யிருந்தான். அதுவுமன்றி, அம்மாளு, தனம் ஆகிய இரண்டு பெண்களும் வண்டிக்குள் இருளில் செய்த விஷமச் செய்கை களையும் அவைகளினால் தான் ஏமாறிப் போகாமல் ஜாக்கிரதையாக நடந்து கொண்டதையும் அவன் ஒருவாறாக சுருக்கமாய் எழுதியனுப்பி இருந்தான். அந்தக் கடிதத்தைப் - படித்த பெண்மணியான ஷண்முகவடிவு தனது ஆருயிர்க் காதலன் தன்மீது வைத்திருந்த மாறாத பிரேமையையும், அவனது உறுதியான நல்லொழுக்கத்தையும் கண்டு கட்டிலடங்கா ஆனந்தம் எய்திப் பூரிப்படைந்தாள். ஆனாலும், அம்மாளு, தனம் ஆகிய இருவரது இழி செயல்களையும், பெண்கள் செய்யத்தகாத அதிஅக்கிரமக் காரியங்களையும் படித்தறிந்து மிகுந்த அருவருப்பும், ஆத்திரமும் அடைந்ததன்றி, அந்த விஷயங்களை மறுபடியும் மனதால் நினைக்கவும் வெட்கிக் குன்றியவளாக இருந்தாள். அந்த நிலைமையில் அவள் அந்தக் கடிதத்திற்கு உடனே மறுமொழி எழுதித் தபாலில் அனுப்பி வைத்தாள். o அம்மாளு, தனம் முதலியோரிடம் வெகு எச்சரிக்கையாக நடந்து, தமது முக்கியக் கருத்தை மாத்திரம் முடித்துக்கொண்டு கூடிய சீக்கிரத்தில் திரும்பிவந்துவிட வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதன்றி, அவனுக்கு வழியில் எவ்விதத் தீங்கும்